பிரித்தானியாவிலிருந்து யாழ்;ப்பாணத்திற்கு நேரடி விமானசேவையை ஆரம்பிக்கவேண்டும் என பிரிட்டனின் தொழில்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கரெத்தோமஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்
பிரித்தானியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான நேரடி விமானச்சேவையின் அவசியத்தை வலியுறுத்தும் பிரச்சாரமொன்றை ஆரம்பித்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
பிரிட்டனில் வாழும் தமிழர்களிற்கு இலங்கையின் வடபகுதியுடன்நெருங்கிய குடும்ப கலாச்சார சமூக தொடர்புகள் உள்ளன.
ஹரோவிலும் பிரிட்டனிலும் வாழும் தமிழர்கள்தங்கள் உறவினர்களை பார்ப்பதற்காகவும், திருமணநிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காகவும் மரணசடங்குகளிற்காகவும் மதநிகழ்வுகளிற்காகவும் தலைமுறை தலைமுறையாக வந்த குடும்ப தொடர்புகளை பேணுவதற்காகவும் யாழ்ப்பாணம் செல்கின்றனர்.
அவர்கள் கொழும்பிற்கு சென்று அங்கிருந்து மேலும் 400கிலோமீற்றர் பயணம் செய்யவேண்டும். புகையிரதம் அல்லது வாகனங்கள் மூலம் செல்வதற்கு ஆறு ஏழுமணித்தியலாங்களுக்கு மேல் அவர்கள் பயணம் செய்யவேண்டும்.இந்த பயணம் முதியவர்கள் சிறுவர்களுடன் பயணம் செய்யும் குடும்பங்களிற்கு மிகவும் சவாலானது.
இதன் காரணமாக பிரிட்டனிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான நேரடி விமானசேவை பிரயாணத்தை இலகுவானதாக வேகமானதாக மாற்றும், தலைமுறை தலைமுறையாக குடும்பங்கள் தொடர்புகளை பேணுவதறகு உதவும், முதியவர்கள் பயணம் செய்வதை இலகுவாக்கும். இலங்கையின் வடபகுதியின்பொருளாதார அபிவிருத்தி சுற்றுலாத்துறை முதலீட்டிற்கு சாதகமான விடயமாக காணப்படும்.
இதன் காரணமாக பிரித்தானிய அரசாங்கம் இலங்கை அதிகாரிகள் , லண்டன் விமானநிலையத்தினர் இணைந்து பணியாற்றி யாழ்ப்பாணத்திற்கும் லண்டனிற்கும் இடையில் சாத்தியமான நேரடி விமானசேவைக்கு உதவவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.