பிராந்திய நாடுகள் மீது நடத்திய தாக்குதல்கள் தொடர்பில் மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுக்கு பதிலடியாக பிராந்திய நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்கள் தொடர்பில், ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் அந்த நாடுகளிடம் உத்தியோகபூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

ஈரானிய அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட விசேட வீடியோ செய்தியிலேயே ஜனாதிபதி பெசெஷ்கியான் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கம் ஈரானுக்கு கிடையாது என அவர் இதன்போது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், அண்டை நாடுகளிலிருந்து ஈரானுக்கு எதிராகத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படாத பட்சத்தில், ஈரான் ஒருபோதும் அந்த நாடுகள் மீது தாக்குதல்களைத் தொடுக்காது எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

“இனிவரும் காலங்களில், முதலில் எமது நாடு தாக்கப்படாத வரை, அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம்” என்ற தீர்மானத்தை ஈரானின் இடைக்கால தலைமைத்துவம் எடுத்துள்ளதாக ஜனாதிபதி பெசெஷ்கியான் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபகாலமாக வளைகுடா பிராந்தியத்திலுள்ள விமான நிலையங்கள் மற்றும் வர்த்தக மையங்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியிருந்த நிலையில், ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

jaf un

ஊடக கற்கைகள் மாணவர்களின் சஞ்சிகை வெளியீடும் – குறுந்திரைப்பட திரையிடலும்

March 7, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சஞ்சிகை ‘கனலி’ – இதழ் 06 வெளியீடும், குறுந்திரைப்பட விழாவும்

mid

இலங்கையின் உணவுப் பாதுகாப்பு குறித்து அவசரக் கூட்டம்!

March 7, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக, இலங்கையின் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் ஏற்படக்கூடிய தாக்கத்தை

heat wa

நாட்டில் நிலவும் வெப்பம் குறித்து கடுமையான எச்சரிக்கை

March 7, 2026

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதன்படி, சப்ரகமுவ, வடமேல்

Srilankan air

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் ரத்து?

March 7, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும் நாளை நள்ளிரவு 11.59 மணி வரை சில

no

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வெற்றி!

March 7, 2026

வடக்கின் 119ஆவது சமரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிரடியாக வெற்றி பெற்றது. யாழ். மத்தியின் மைதானத்தில் வியாழக்கிழமை (05) ஆரம்பித்து

arre

போதைப்பொருளை தடுக்கும் தேசிய திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 1,073 பேர் கைது!

March 7, 2026

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று வெள்ளிக்கிழமை

ff

கசிப்புடன் இளைஞர் கைது!

March 7, 2026

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனைப் பகுதியில் 28,500 மில்லி லீற்றர் (28.5 லீற்றர் ) கசிப்புடன் 26

mazooth

பிராந்திய நாடுகள் மீது நடத்திய தாக்குதல்கள் தொடர்பில் மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!

March 7, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுக்கு பதிலடியாக பிராந்திய நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்கள் தொடர்பில், ஈரானிய ஜனாதிபதி

nep

நேபாளத்தில் பாலேந்திர ஷா பிரதமராகும் வாய்ப்பு?

March 7, 2026

நேபாளத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ராஷ்டிரிய சுதந்திர கட்சி பல தொகுதிகளில் முன்னிலை

ban

தெஹ்ரானில் அமைந்துள்ள கமேனியின் பிரம்மாண்ட நிலத்தடிப் பதுங்கு குழி அழிப்பு

March 7, 2026

தெஹ்ரானில் அமைந்துள்ள ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவருக்குச் சொந்தமான இரகசிய ‘நிலத்தடி பதுங்கு குழி’ ஒன்றை தாம் அழித்துள்ளதாக இஸ்ரேலிய

padd

பல குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ள குற்றவாளி பட்டுவத்தே சாமரவின் மனைவியின் வீடு மீது துப்பாக்கிச் சூடு

March 7, 2026

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான பட்டுவத்தே சாமர என்பவரின் மனைவியின் வீட்டின் மீது இன்று (07) அதிகாலை துப்பாக்கிச் சூடு

thaya

சுரேஷ் சாலேவை சந்திக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை – நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி

March 7, 2026

பொலிஸ் அறிக்கை ஒன்றை எடுத்து வராத எந்த நபருக்கும், அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு)