கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள குவெல்ஃப் நகரத்தைச் சேர்ந்த ஒரு மொடல், பாரிஸ் ஃபேஷன் வீக்கில் சானல் எக்ஸ்க்ளூசிவ் ரன்வேயில் நடந்து சென்ற முதல் திருநங்கை நபராக சாதனை படைத்துள்ளார்.
குவெல்ஃப் நகரத்தைச் சேர்ந்த 24 வயதான டால்டன் டுபுவா, சமீபத்திய பாரிஸ் ஃபேஷன் வீக்கில் சானல் எக்ஸ்க்ளூசிவ் ரன்வேயில் நடந்து சென்ற முதல் திருநங்கை மொடலாக சாதனை படைத்தார்.
கொரோனா காலத்தில் குவெல்ஃப் நகரில் பள்ளியை விட்டு விலகிய பிறகு, டுபுவா மொடலிங் துறையில் ஈடுபடத்தொடங்கினார். அதுவே அவர் வளர்ந்த தென்மேற்கு ஒன்டாரியோவில் உள்ள நகரம்.
“ரன்வேயில் போகும் வரை நிறைய பதட்டம் இருக்கும். ஆனால் ஒருமுறை தயாரிப்பு குழு உங்களை ரன்வேக்கு அனுப்பி, நீங்கள் நடக்க ஆரம்பிச்சால் அது வேறொரு கதாபாத்திரத்துக்குள் நுழைந்த மாதிரி இருக்கும்,” என்று அவர் கூறியுள்ளார். அது மாத்திரமன்றி அந்த அனுபவத்தை, தனது மொடலிங் பயணத்தில் “வாழ்க்கையை மாற்றிய வாய்ப்பு” என்று அவர் விவரித்தார்.
மொடலிங் ஒரு சாத்தியமான தொழிலாக இருக்கும் என்று தான் ஒருபோதும் நினைக்கவில்லை என்றும் டுபுவா கூறினார். தன் வாழ்க்கையில் இந்த நிலைக்கு தான் வந்தது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை இல்லை என்று டுபுவா கூறினார்.
“நான் மிகவும் சாதாரண பின்னணியிலிருந்து வந்தவள். எனக்கு பெரிய நிதி ஆதரவுகள் எதுவும் கிடைக்கவில்லை. மொடலிங்கில் ஆரம்பிக்கும்போது, உங்களை நீங்களே நிரூபிக்க வேண்டிய அவசியம் அதிகம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.