அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவசர சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகல் சுரேஷ் சலே மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் (ETU) அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அவரது தற்போதைய உடல்நிலை குறித்த துல்லியமான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.தற்போது உத்தியோகபூர்வ தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் (STF) பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கு மத்தியிலேயே மருத்துவ சிகிச்சையைப் பெற்று வருகிறார்.