யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் தொழிலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பருத்தித்துறை முனைப்பகுதியைச் சேர்ந்த மூன்று கடற்தொழிலாளர்கள் வழமை போன்று ஒரு படகில் கடற்தொழிலுக்குச் சென்றுள்ளனர். நேற்று திங்கட்கிழமை (மார்ச் 30, 2026) முதல் அவர்கள் கரை திரும்பாத நிலையில், அவர்கள் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தற்போது காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணியில் சக தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.