பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் சொல்லிசை கலைஞர் கைது செய்யப்பட்டதற்கு தமிழ் ஏதிலிகள் பேரவைகண்டனம்-

பயங்கரவாத தடைச்சட்டத்தின்  கீழ் இளம் தமிழ் இசைக்கலைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது கருத்துச் சுதந்திரம் கலை சுதந்திரம் மற்றும் வடக்கு-கிழக்கில் தமிழ் கலாச்சார மற்றும் அரசியல் வெளிப்பாடுகள் தொடர்ந்து இலக்கு வைக்கப்படுவது குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது.

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக பயங்கரவாத தடைச்சட்டமானது தமிழர்களுக்கு எதிராக விகிதாச்சாரத்திற்கு அப்பாற்பட்ட முறையில் பயன்படுத்தப்பட்டு வருவதுடன் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சட்ட வல்லுநர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகளால் பரவலாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் தன்னிச்சையான கைதுகள் குற்றச்சாட்டுகள் இன்றி நீண்டகால தடுப்புக்காவல் மற்றும் கருத்து வேறுபாடுகளை ஒடுக்குதல் ஆகியவற்றை சாத்தியமாக்கியுள்ளதுடன் தமிழ் அடையாளம் மற்றும் வெளிப்பாடுகளை குற்றமயமாக்குவதற்கு இணையான ஒன்றாக மாறியுள்ளது.

அடக்குமுறைச் சட்டங்கள் குறிப்பாக பயங்கரவாத தடைச்சட்டம்  நீக்கப்படும் என்று ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டணி ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் உறுதியளித்திருந்த நிலையில் இச்சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது பெரும் கவலையை அளிக்கிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும்  பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்தி வைக்குமாறும் அதனை ரத்து செய்யுமாறும் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும் இந்த கொடூரமான சட்டத்தின் கீழ் தமிழ் மக்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டுஇ தடுத்து வைக்கப்பட்டு வருகின்றனர்.

உலகெங்கிலும் உள்ள தமிழ் கலைஞர்கள் இசைக்கலைஞர்கள் பாடலாசிரியர்கள் இசையமைப்பாளர்கள் கலைஞர்கள் மற்றும் கலாச்சார ஆளுமைகள் ‘ஹிப்ஹாப் சங்கீ’ உடன் ஒற்றுமையாக நிற்குமாறும் அவரை விடுதலை செய்யக் கோரி பகிரங்கமாக குரல் கொடுக்குமாறும் தமிழ் அகதிகள் சபை அழைப்பு விடுக்கிறது. அரசியல் கருத்துக்களுக்கு அப்பாற்பட்டு எந்தவொரு கலைஞரும் தங்களது படைப்பாற்றல் அல்லது கலை வெளிப்பாட்டின் காரணமாக சிறைத்தண்டனையையோ அல்லது தடுப்புக்காவலையோ எதிர்கொள்ளக் கூடாது.

“தமிழ் குரல்களை ஒடுக்குவதற்கு நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு சட்டத்தின் கீழ் ஒரு தமிழ் கலைஞர் கைது செய்யப்படும்போது அது ஒரு தனிநபர் மீதான தாக்குதல் மட்டுமல்ல கருத்துச் சுதந்திரம் மற்றும் கலை சுதந்திரத்தின் கோட்பாடுகளுக்கே விடுக்கப்பட்ட சவாலாகும். உலகெங்கிலும் உள்ள தமிழ் கலைஞர்கள் ஹிப்ஹாப் சங்கீயுடன் ஒற்றுமையாக நின்றுஇ அவரது விடுதலைக்காக குரல் கொடுக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். மௌனமாக இருப்பது கலை மற்றும் அரசியல் வெளிப்பாடுகளை ஒடுக்க நினைப்பவர்களை மேலும் துணிச்சலடையச் செய்யும்” என்று தமிழ் அகதிகள் சபையின் ஊடகப் பேச்சாளர் ரேணுகா இன்பகுமார் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கும் கருத்துச் சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்கும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஆஸ்திரேலிய அரசு ஐக்கிய நாடுகள் சபை ஐரோப்பிய ஒன்றியம் கனடா ஐக்கிய இராச்சியம் (அமெரிக்கா மற்றும் பிற ஜனநாயக நாடுகளிடம் தமிழ் அகதிகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

ஹிப்ஹாப் சங்கீயின் கைது சீர்திருத்தங்கள் குறித்த தொடர்ச்சியான வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட போதிலும் தமிழ் கலைஞர்களும் ஆர்வலர்களும் தங்களது அடிப்படை சுதந்திரங்களைப் பயன்படுத்தியதற்காக தொடர்ந்து அடக்குமுறைகளை எதிர்கொள்கின்றனர் என்பதை நினைவூட்டுகிறது. சர்வதேச சமூகம் இதில் மௌனமாக இருக்கக் கூடாது.

s

முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு யாழ்.பல்கலைக்கழகத்தில்…

June 13, 2026

முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம்(13) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. இன்றைய

Legents

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 13, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

arrestt

சிறுவர் துஷ்பிரயோகம்-வான்கூவரில் பெண் ஒருவர் போலீஸாரால் கைது!

June 13, 2026

குழந்தை சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் (Child Exploitation Offences) தொடர்பான விரிவான விசாரணைக்குப் பின்னர், பெண் ஒருவரை போலீஸார்

723904451_1420449476781494_4012668450373987547_n

மிசிசாகா பாலியல் வன்கொடுமை: சந்தேக நபரைக் கண்டுபிடிக்க போலீஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

June 13, 2026

மிசிசாகா (Mississauga) பகுதியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் சந்தேக நபரின் புதிய புகைப்படம் ஒன்றை

namal raja

தமிழ் கலைஞர் ‘’ விடுதலை: நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

June 13, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட 24 வயதான தமிழ் ஹிப்ஹாப் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார்

7HUTJBLLLJCM3JECARQGPUSJAY

வஸாகா பீச் கொடூரத் தாக்குதல்: டொராண்டோ இளைஞருக்கு ஆயுள் தண்டைனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

June 13, 2026

பாரி (ஒன்டாரியோ), ஜூன் 12: கடந்த 2022-ஆம் ஆண்டு வஸாகா பீச் (Wasaga Beach) பகுதியில் நபர் ஒருவரைத் திட்டமிட்டு

fifa

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: ‘மக்களை ஏமாற்ற மோசடி கும்பல் தீவிரம்’ – சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 13: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் (FIFA World Cup 2026) தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், ஆன்லைனில்

37KGPQJU55HWFGHEKUHQ7243K4

டொராண்டோவில் 6 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து: 3 பேர் காயம், ஒருவர் கைது!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 14: கனடாவின் டொராண்டோ நகரில் திருடப்பட்ட வாகனம் உட்பட 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட பயங்கர விபத்தில்

8

“மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே வில்லன்; கர்நாடகாவுக்கு மறைமுக ஆதரவு!” – வைகோ அசுர வேக உக்கிரம் நிறைந்த குற்றச்சாட்டு!

June 13, 2026

சென்னை: “மேகதாது அணை விவகாரத்தில் மத்திய பாஜ அரசே ஒட்டுமொத்த வில்லனாகச் செயல்படுகிறது; வெளிப்படையாக அனுமதி வழங்க மாட்டோம் என்று

7

“தவெக அரசு பாஜகவின் ஜெராக்ஸ் காப்பி; அடுத்த முறை எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் இந்த ஆட்சியை அகற்றுவது உறுதி!” – முதல்வர் விஜயை அசுர வேகத்தில் கிழித்தெடுத்த மு.க.ஸ்டாலின்!

June 13, 2026

சென்னை: “மாநிலத்தில் தற்பொழுது நடந்து வரும் முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசு என்பது அப்பட்டமாக மத்திய பாஜக அரசின் ஒரு

719519754_1698479904786137_2526426679292084547_n

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம்

June 13, 2026

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது மாந்தை கிழக்கு மற்றும்

i

கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி காலமானார்

June 13, 2026

தாய்லாந்து மன்னர் வஜிராலோங்கோர்னின் மூத்த மகளும், அந்நாட்டு அரச குடும்பத்தின் மிக முக்கியமான ஆளுமையுமான இளவரசி பஜ்ரகிதியாபா தனது 47ஆவது