சென்னை:
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்த அறிகுறிகளை வெளிப்படுத்திய நிலையில், அக்கட்சியின் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்செல்வன் கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். மதிமுக எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யவிருப்பதாகப் பரவிய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், “பதவியை ராஜினாமா செய்யமாட்டேன், தொடர்ந்து சீர்காழி எம்.எல்.ஏ-வாகப் பணியாற்றுவேன்” என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
கடையநல்லூர் எம்.எல்.ஏ. தி.மு. ராஜேந்திரன் இது குறித்து அமைதி காத்து வரும் நிலையில், செந்தில்செல்வனின் இந்த முடிவு மதிமுக தலைமைக்கு மேலும் நெருக்கடியைத் தந்துள்ளது. நாளை நடைபெறவுள்ள மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், செந்தில்செல்வனின் விலகல் அரசியல் களத்தில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.
#SenthilSelvan #MDMK #Vaiko #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #Resignation #Politics2026 #TamilNaduPolitics #PartyExit #TamilNaduNews #PositiveGovernance #Assembly #Debate #TNPolitics #PoliticalNews #Leadership #AdministrativeReform #GovernmentAccountability #PoliticalConduct #PublicRepresentation #Justice #PoliticalClash