நோர்வே அமெரிக்க தூதரகத்தில் குண்டுவெடிப்பு

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் நுழைவாயிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) அதிகாலை சக்திவாய்ந்த குண்டு வெடிப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் தூதரகக் கட்டடத்திற்குச் சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என நோர்வே பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மத்திய கிழக்கில் அமெரிக்கா முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

அந்நாட்டு நேரப்படி இன்றையதினம் அதிகாலை 1.00 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தூதரகத்தின் கொன்சியூலர் பிரிவு நுழைவாயிலையே இந்த வெடிப்புத் தாக்குதல் இலக்கு வைத்துள்ளது.

கட்டடத்தின் ஒரு பகுதிக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும், உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என பொலிஸ் கட்டளை அதிகாரி மைக்கேல் டெல்மர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தைத் தொடர்ந்து ஸ்லோ பொலிஸார், மோப்ப நாய்கள், ட்ரோன்கள் மற்றும் ஹெலிகொப்டர்களின் உதவியுடன் பாரிய தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர். தானியங்கி ஆயுதங்கள் ஏந்திய பொலிஸார் தூதரகத்தைச் சூழப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஈரான் மீதான அமெரிக்காவின் இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு மற்றும் ஏனைய பிராந்தியங்களில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் ஏற்கனவே அதியுயர் பாதுகாப்பு எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன.

எனினும், ஒஸ்லோவில் இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவத்திற்கும் மத்திய கிழக்கு போருக்கும் நேரடித் தொடர்பு உள்ளதா என்பது குறித்து இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என நோர்வே பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வே புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

thiga

தோட்டத் தொழிலாளர்களது சம்பள உயர்வு தற்காலிக நிவாரணமே

March 8, 2026

தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பள உயர்வு என்பது ஒரு தற்காலிக நிவாரணம் மட்டுமே எனவும், அவர்களைச் சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதே

ne

நியூகாசிலை வீழ்த்தி காலிறுதியில் சிற்றி

March 8, 2026

இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு மன்செஸ்டர் சிற்றி தகுதி பெற்றுள்ளது. விலகல் முறையிலான இத்தொடரில்,

van

செங்கலடியில் வண்டுகளுடன் உணவு: உணவகத்திற்கு சீல்

March 8, 2026

மட்டக்களப்பு, செங்கலடி பகுதியில் மனிதப் பாவனைக்கு உதவாத மற்றும் வண்டுகள் நிறைந்த உணவுப் பொருட்களைக் கொண்டு உணவு தயாரிப்பில் ஈடுபட்ட

va

வளைகுடா எடுத்துள்ள அதிரடி திட்டம்

March 8, 2026

மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருவதையடுத்து, வளைகுடா நாடுகளின் எரிசக்தி உட்கட்டமைப்பு, சுற்றுலாத் துறை மற்றும் பாதுகாப்பு வரவு

lax

தேர்தலுக்காகவே நடிகர் விஜய்யின் தனிப்பட்ட விஷயங்கள் பெரிதாக்கப்படுகிறன!

March 8, 2026

தவெக தலைவர் விஜய்யின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து நான் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

vi

உலகில் அதிக ஒல்லியான மக்கள் வாழும் நாடுகள்..

March 8, 2026

உலகில் உள்ள நாடுகள் மத்தியில் உணவு பழக்கம் , கால நிலை போன்றவை வேறுப்படும். இதனால், மனிதர்களின் அன்றாட வேலை

st

பாஜகவை வீழ்த்துவதே பிரதான இலக்கு…

March 8, 2026

திமுக தலைமையிலான பேச்சுவார்த்தைக் குழுவுடன் உரையாடி விட்டு, அதை எங்கள் கமிட்டியில் தெரிவிப்போம். கமிட்டி தான் இறுதி முடிவை எடுக்கும்.

e

தமிழக சட்டமன்றத் தேர்தல்; உங்கள் வாக்குக்கு நான் வரிசெலுத்த முடியாது – வினோதினி

March 8, 2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் இலவசங்களை வாரி வழங்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில்

vij

விஜய் – சங்கீதா விவாகரத்து: ரூ. 225 கோடி கொடுத்து சமரச பேச்சு?

March 8, 2026

விஜய், சங்கீதா விவாகரத்து வழக்கில் புது திருப்பமாக நீதிமன்றத்திற்கு வெளியே பேசி ரூ. 225 கோடி கொடுத்து எல்லாம் முடிவாகிவிட்டதாக

san

துப்பு துலக்கும் நிபுணராக சந்தானம்…

March 8, 2026

கதையின் நாயகனாக நடிக்க தொடங்கி இருபதாவது திரைப்படத்தில் நடிக்கும் சந்தானம்.. அப்படத்தில் கால பயணத்தின் அடிப்படையில் துப்பு துலக்கும் நிபுணராக

tez

‘டெக்ஸ்லா’ படத்தின் தொடக்க விழா!

March 8, 2026

தமிழ் திரையுலகின் தனித்துவமான நடிகர்களில் ஒருவராக அடையாளம் பெற்றிருக்கும் ஜெய் – மலையாள திரையுலகின் நட்சத்திர நடிகரான சுராஜ் வெஞ்சரமூடு

po

நடிகர் கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ பிளடி பாலிடிக்ஸ்’

March 8, 2026

நட்சத்திர வாரிசும், பிரபல நடிகருமான கௌதம் ராம் கார்த்திக் கதையின் நாயகனாக அரசியல் கள பின்னணியில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு