நேபாளத்திற்கு, இலங்கை ஒரு மில்லியன் டொலர் உதவி

நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய வௌ்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகளுக்காக இலங்கை ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கியுள்ளது.

கடந்த ஒகஸ்ட் 26 ஆம் திகதி நேபாளத்தில் பாரிய வௌ்ளம் ஏற்பட்டது.

இந்த அனர்த்தத்தில் 1300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 5100 பேர் காணாமல் போயுள்ளனர்.

அத்துடன் தமது வீடுகளையும், வர்த்தகங்களையும் இழந்து அங்குள்ள மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர்.

இந்நிலையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வழிகாட்டலுக்கு அமைய நேபாளத்திற்கு ஆதரவளிப்பதாக இலங்கை அரசாங்கம் அண்மையில் வாக்குறுதி அளித்திருந்தது.

அதனை நிறைவேற்றும் வகையில், நேபாளத்திற்கான இலங்கைத் தூதுவர் ருவந்தி தெல்பிட்டிய 1 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை நேபாள அரசாங்கத்திடம் நேற்று (9) கையளித்துள்ளதாக காத்மண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

காத்மண்டுவில் உள்ள வெளிவிவகார அமைச்சில் வைத்து நேபாள வெளிவிவகார அமைச்சர் சிஷிர் கனாலிடம் (Shisir Khanal) இந்த நிதி உதவியானது உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் போது, தூதுவர் தெல்பிட்டிய இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நேபாள மக்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், பங்கினையும் மீண்டும் வலியுறுத்தியதுடன், பேரழிவில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்குத் தனது இதயப்பூர்வமான இரங்கலையும் தெரிவித்துக் கொண்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவுவதற்கும், நேபாள அரசாங்கத்தின் தற்போதைய மனிதநேய, நிவாரண மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பற்கும் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதியுதவியைக் கையளிப்பது இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான நெருங்கிய மற்றும் நீண்டகால நட்புறவு, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை மேலும் பிரதிபலிக்கிறது.

ஆபத்தான காலங்களில் நேபாளத்துடனும் அதன் மக்களுடனும் உறுதுணையாக நிற்கவும், இரு நாடுகளுக்கும் இடையிலான நிலையான உறவுகளை வலுப்படுத்தவும் இலங்கை கடமைப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் நேபாள அரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்து செயற்படுவதுடன், தற்போதைய நிவாரண மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கான பொருத்தமான வழிகளை ஆராயும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

aaa

மாணவர்களின் புத்தகப்பை எடை குறைக்கப்படும்

September 13, 2026

பாடசாலை மாணவர்கள் சுமக்கும் புத்தகப்பை எடையை கணிசமாகக் குறைக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு

wat

வறட்சியான வானிலை – 43,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குக் குடிநீர் விநியோகம்!

September 13, 2026

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட 43,221 குடும்பங்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

photo-collage.png

தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் பேரணி!

September 13, 2026

தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

image-483-edited (1)

“தனித்துப் போட்டியிட்டாலும் தவெக அரசுக்கான ஆதரவு தொடரும்; ஆட்சிக்கு பாதிப்பில்லை!” – பெ. சண்முகம் விளக்கம்

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் இடதுசாரி கட்சிகள் தனித்துக் களமிறங்கினாலும், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து

dailythanthi_2026-09-13_zjqobfer_State-01

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிறைவு: ஆளுநர் அர்லேகருடன் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் சந்திப்பு!

September 13, 2026

சென்னை: 17-வது தமிழ்நாடு சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத்

dailythanthi_2026-08-25_1ha14b7k_CHENNAI-06

“முதலமைச்சர் விஜய் மீது நம்பிக்கை உள்ளது!” – நடிகை கஸ்தூரி

September 13, 2026

சென்னை: ‘ஆஃப் தி ரெக்கார்ட்’ திரைப்படத்தின் முன்னோட்ட விழாவில் கலந்துகொண்ட நடிகை கஸ்தூரி, தவறு செய்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை

26-6aa6392b9a6cd

அமைச்சர் நிர்மல்குமார் குறித்துச் சர்ச்சை பேச்சு: திமுக எம்.பி. ஆ. ராசா மீது தவெக காவல் துறையில் புகார்!

September 13, 2026

சென்னை: சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் குறித்துச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான ஆ. ராசா

thara

5 முனைப் போட்டியால் சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒருநாள் மட்டுமே எஞ்சியுள்ளது!

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால், தேர்தல் களம்

1200-675-27028368-thumbnail-16x9-veerapandiyan

இடைத்தேர்தலில் தனித்துக் களமிறங்கும் இடதுசாரிகள்: தவெக ஆதரவுக் கோரிக்கையை நிராகரித்தது சிபிஐ!

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், எந்தக் கூட்டணியிலும் இடம்பெறாமல் இடதுசாரி கட்சிகள் (CPI & CPM)

page

இடைத்தேர்தல் களம்: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு!

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக

Screenshot 2025-07-30 100024

நாடெங்கும் நலமும் வீடெங்கும் வளமும் பெருகட்டும்: எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

September 13, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தித் திருநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்குத் தனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

images - 2026-09-13T134857.284

“கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக கூட்டணிக்கு வருவார்கள்!” – அமைச்சர் ஷாஜகான் நம்பிக்கை

September 13, 2026

நாகர்கோவில்: கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வருவதாகவும், அவர்கள் வரக்கூடிய நாள்களில் அதிகாரப்பூர்வமாகத்