நீர்கொழும்புக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் மீன்பிடிப் படகொன்று கவிழ்ந்ததில் காணாமல்போயிருந்தத இரு மீனவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
அனர்த்தத்திற்குள்ளான மற்றைய மீனவர் பாதுகாப்பாகக் கரை சேர்ந்ததையடுத்து மீட்கப்பட்டு, தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (01) பிற்பகல் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்டுச் சென்ற படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்தப் படகு விபத்துக்குள்ளாகியுள்ளமை முதன்முதலில் வேறொரு மீன்பிடிப் படகு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே தெரியவந்தது.