நிலக்கரி கொள்வனவு ஒப்பந்தங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, இதுவரை 40 அரச அதிகாரிகளிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது.
கொள்வனவுக் குழுக்களில் பணியாற்றிய அதிகாரிகளும் இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் அடங்குவர்.
தற்போது பெறப்பட்டு வரும் வாக்குமூலங்களின் ஊடாகத் திரட்டப்படும் சான்றுகளின் அடிப்படையில், தேவைப்படின் முன்னாள் அமைச்சர்களிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பதிவு செய்யவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கான பகிரங்க சாட்சிய விசாரணை ஜூலை முதல் வாரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நிலக்கரி ஒப்பந்தங்கள் தொடர்பான விசாரணை குறித்து ஆணைக்குழுவிற்கு 28 புகார்கள் கிடைத்துள்ளன.