இந்தியா – நியூஸிலாந்து மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டம் குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் புதன்கிழமை (ஜன. 14) நடைபெறுகிறது.
மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் வென்ற இந்தியா, இந்த ஆட்டத்திலும் வெற்றியுடன் தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது.
இந்திய அணியைப் பொருத்தவரை, முதல் ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய விராட் கோலியுடன், கேப்டன் ஷுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரும் இந்த ஆட்டத்திலும் அணியின் ஸ்கோருக்கு பலம் சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
அந்த ஆட்டத்தில் விரைவாகவே வெளியேறிய தொடக்க வீரரான ரோஹித் சர்மா, இந்த ஆட்டத்தில் நிலைத்து நின்று ரன்கள் சேர்ப்பார் என எதிர்பார்க்கலாம். பெüலிங்கில் முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோர் நியூஸிலாந்து பேட்டர்களுக்கு சவால் அளிக்கக் காத்திருக்கின்றனர்.
காயம் காரணமாக வெளியேறிய ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஆயுஷ் பதோனி அணியில் சேர்க்கப்பட்டாலும், பிளேயிங் லெவனில் நிதீஷ்குமார் ரெட்டிக்கு வாய்ப்பு கிடைக்கும் என கணிக்கப்படுகிறது.