நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் பெலவத்தை, அக்குரெகொட பகுதியில் அமைந்துள்ள இல்லத்திற்கு முன்பாக, சுகீஸ்வர பண்டார தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) ஆதரவாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (28) போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
கருவூலத்துடன் தொடர்புடைய 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் சைபர் நிதி மோசடிக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தின் போது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார மற்றும் அங்கிருந்த ஏனையோர் மீது இனந்தெரியாத நபர்களால் சாணத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதோடு, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பொலிஸார் தலையிட்டனர்.