நாம் ஏற்றுகின்ற சுடர் உயிரிழந்த தியாகிகளுக்கு கௌரவமாகவும் எம் அரசியல் எதிரிகளுக்கு விழிப்பையும் உண்டாக்க வேண்டும் – அருட்தந்தை மா. சத்திவேல்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு யார் காரணமாக இருந்தார்களோ அவர்களுக்கே மக்கள் வாக்களித்து பதவியிலும் அமர்த்தும் நிலைக்கு தள்ளியுள்ளனர் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான இறுதி ஆயத்தங்கள் தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பல்வேறு இடங்களில் முள்ளிவாய்கால் கஞ்சியும் வழங்கப்படுவதை நாம் அறிவோம்.இது வெறும் நிகழ்வு அல்ல என்பதும் எமக்கு தெரியும்.இது எமது வலிகளுக்கான அரசியல் திசை காட்டி. மக்களின் அரசியல் வலிமையையும் அதற்கான மக்கள் திரட்சியையும் உலகிற்கு காட்டி நிற்கும் மக்கள் தளம்.

ஆனால் அரசியல் வலி சுமந்து 17வது ஆண்டினை தொட்டு நிற்கின்ற வேளையில் நாம் கற்றுக் கொண்ட பாடங்கள் என்ன? எந்த அரசியல் திசையை நோக்கி பயணிக்கின்றோம்? அரசியல் வலி சுமக்கும் ஓர் இனமாக மக்கள் அரசியலை பலமடைய செய்வதற்கும், எம் அரசியல் எதிரிகளுக்கு எதிராக எம் மக்கள் பலத்தை எந்த அளவிற்கு காட்டி உள்ளோம்? என்பதற்கான விடை தேடுகின்ற போதுதான் நாம் ஏற்றுகின்ற சுடர் உயிர் தியாகிகளுக்கு கௌரவமாகவும், எம் அரசியல் எதிரிகளுக்கு அரசியல் விழிப்பையும் ஏற்படுத்தும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை எமது விடயத்திலும் தோல்வி கண்ட அமைப்பாகவே தெரிந்த போதிலும் எம்மவர்கள் அங்கு செல்வதை புனித யாத்திரையாக்கி ஒவ்வொரு வருடமும் பயணிக்கின்றனர். அதிலும் கூட்டு தன்மை கிடையாது. தனித்தனியாக சொர்க்கம் போக நினைப்தாகவே தெரிகிறது .ஐ.நா மனித உரிமை பேரவைக்கு கடிதம் எழுதுவதிலும் இதே நிலையே தொடர்கின்றது.

கடந்த 2024 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதில் தொடங்கி அண்மையில் வடக்கு கிழக்கு ஆயர்களின் முயற்சி , தமிழ் சட்டத்தரணி களின் முயற்சி எல்லாமே தோல்வியாகவே நாம் காண்கின்றோம்.

எமது அரசியல் விடயத்திலும் சர்வேச ராஜதந்திரிகளை கையாள்வதிலும் நாம் இருளில் நடப்பதாகவே தெரிகிறது. அவர்கள் எமக்கு பாடம் சொல்லும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள், மாவீரர் தின நிகழ்வுகள் எல்லாம் கோயில் திருவிழாக்களாகியுள்ளதாகவே பலர் கருதுகின்றனர். திருவிழாக்கள் உபயக்காரர்களைப் போல ஒழுங்கமைப்பாளர்கள் அவற்றை தத்தமது அடையாளத்திற்கான காட்சிகளாக்கி மக்களின் உணர்வுகளை தூண்டி அவர்களை போதை நிலைக்கு தள்ளுவதை என்னவென்று கூறுவது?

கடந்த 17 ஆண்டுகளாக தமிழர் தாயக அரசியலை மக்கள் மையப்படுத்தி பலமடையச் செய்வதில் பெரும்பாலான அரசியல் தலைமைகள் அரசியல் தடம் புரண்டு, அரசியல் அறம் விலகி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு யார் காரணமாக இருந்தார்களோ அவர்களுக்கே மக்கள் வாக்களித்து பதவியிலும் அமர்த்தும் நிலைக்கு தள்ளியுள்ளனர் எனலாம். அவர்களை தமிழர்களின் குருதி தோய்ந்த நிலத்திற்கு அழைத்து வந்து செங்கம்பலம் விரித்து மேள தாள ரகத்தோடு மேடைக்கு அழைத்துச் செல்வதோடு நின்றுவிடாது செல்ஃபி எடுத்து மகிழும் தலைமுறையினரும் உருவாகியுள்ளமைக்கு நாமே காரணம் என சிந்திக்காதும் உள்ளனர்.இதுவே எமது அரசியல் அவலம்.

இது இவ்வாறிருக்க முள்வாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் பகிரப்படும் கஞ்சியில் சுவை தேடும் கூட்டமும் உருவாகியுள்ளதோடு, சுவையூட்டுவோரும் உள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், மாவீரர் தின நிகழ்வுகள், தியாகிகள் தினம் தொடர்பில் வடக்கு கிழக்கு தழுவிய பொது கட்டமைப்பு உருவாக்கப்படுதலும் அதன் அரசியல் வழிதடமும் வரையப்படல் வேண்டும்.அத்தோடு மேற்கூறிய நிகழ்வுகளுக்கான பொது விதிகளும் மக்கள் மயப்படுத்தலும் வேண்டும். அதுவே எம் அரசியலை சரியான திசையில் பயணிக்க வழி சமைப்பதோடு மக்களை திரட்சி கொள்ளவும் செய்யும். எமது அரசியல் வழி பயணம் உயிர் தியாகத்தால் கட்டி எழுப்பப்பட்டது. அது தொடர்பான ஆழமான அரசியல் சிந்தனை மக்கள் பயப்படுத்துவதன் மூலமே எமது அரசியல் இலக்கை நோக்கி பயணிக்க முடியும். அதற்காக இவ் வருடம் தியாக சுடர் ஏற்றுவோம். ஒன்றான மக்களாக எழுவோம்.

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்

mala thiru

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறள்!

October 10, 2026

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறளை மேற்கோள் காட்டி மலேசிய பார்லியில் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் உரையாற்றியது, வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

17-2026-10-09-16-04-25

“நான் தளபதி விஜய்யின் தங்கச்சி… உண்மைக்கு கிடைத்த வெற்றி இது!” – மரகதம் குமரவேல்!

October 10, 2026

செங்கல்பட்டு: மதுராந்தகம் இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், இது உண்மைக்குக் கிடைத்த வெற்றி என

26-6ac8ee4988b7d

“இடைத்தேர்தல் வெற்றி: சட்டசபையில் த.வெ.க. பலம் 109 ஆக அதிகரிப்பு – பெரும்பான்மைக்கு இன்னும் 9 இடங்கள் தேவை!”

October 10, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் 109