நாட்டில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சார்பற்றதாக செயல்பட வேண்டும்

லஞ்ச ஊழல் ஆணைக்குழு அனைவரையும் ஒரேமாதிரி செயற்படுத்த வேண்டும். தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு ஒருமாதிரியும் ஏனையவர்களுக்கு வேறு மாதிரியும் செயற்பட முடியாது. அத்துடன் நாட்டில் மின் துண்டிப்பு மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் நிலக்கரி மோசடியே இதற்கு காரணமாகும் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) இடம் பெற்ற ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்குமான ஊதியம் மற்றும் சேவை நிபந்தனைகளை தீர்மானித்தல் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

அனைவரும் சட்டத்துக்கு கீழ் என ஜனாதிபதி தெரிவிக்கிறார். ஆனால் எரிசக்தி அமைச்சருக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் செய்யப்பட்டிருக்கும் முறைப்பாடு தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறாமல் அவருக்கு எதிராக மேல்நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தால், சம்பந்தப்பட்டவரை கைது செய்து, வாக்குமூலம் பெற்றுக்கொண்டே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். எரிசக்தி அமைச்சருக்கு அவ்வாறு எந்த நடைமுறையும் பின்பற்றப்படவில்லை. அப்படியானால் எரிசக்தி அமைச்சர் சட்டத்துக்கு மேலால் இருக்கிறாரா?

அதனால் லஞ்ச ஊழல் ஆணைக்குழு அனைவரயும் ஒரேமாதிரி செயற்படுத்த வேண்டும். தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு ஒருமாதிரியும் ஏனையவர்களுக்கு வேறு மாத்திரியும் செயற்பட முடியாது. அதேபோன்று கொள்கலன் மோசடி குற்றச்சாட்டு, மன்னார் காற்றாலை மோசடி, அசிரி இறக்குமதி விலை மனு கோரலில் ஏற்பட்ட மோசடி போன்ற முறைப்பாடுகள் தொடர்பில் இதுவரை விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை. நிலக்கரி மோசடி தொடர்பில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் எந்த விசாரணையும் ஆரம்பிக்கப்படவில்லை. இந்த நிலக்கரி மோசடியால் இதுவரை 8497 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மின் உற்பத்தி குறைவடைந்துள்ளது. இந்த குறைபாட்டை மறைப்பதற்கு நாள் ஒன்றுக்கு 35இலட்சம் லீட்டர் டீசல் தேவைப்படுகிறது. வருடத்துக்கு 140 இலட்சம் லீட்டர் தேவைப்படுகிறது. எரிபொருளுக்கு வரிசையில் இருக்கும் மக்களுக்கு வழங்குவதற்காக கொண்டுவரும் டீசலையே அரசாங்கம் மின்சார சபைக்கு வழங்குகிறது. அரசாங்கம் செய்த தவறினாலே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஏப்ரல், ஜுன், ஜூலை மாதங்களில் மின்சார துண்டிப்பு மேற்காெள்ள வேண்டிவரும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசாங்கத்தின் நிலக்கரி மோசடியே இதற்கு காரணமாகும் அதனால் அரசாங்கமே இதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.

அத்துடன்ஙங தரம்குறைந்த நிலக்கரி கொண்டுவந்தமைக்காக மின்சக்தி அமைச்சருக்கு எதிராக குற்றப்பத்திரம் சமர்ப்பக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை அரசாங்கம் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவரை அந்த அமைச்சில் வைத்திருக்கிறது. வெளிப்படைத்தன்மை, சட்டத்தின் ஆட்சி தொடர்பில் கதைக்கும் அரசாங்கம், அவர்களில் ஒருவருக்கு எவ்வாறான குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும்போது அனைவரும் அவரை பாதுகாக்கவே முயற்சிக்கின்றனர் என்றார்.

Mujibar Rahuman

நாட்டில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சார்பற்றதாக செயல்பட வேண்டும்

March 18, 2026

லஞ்ச ஊழல் ஆணைக்குழு அனைவரையும் ஒரேமாதிரி செயற்படுத்த வேண்டும். தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு ஒருமாதிரியும் ஏனையவர்களுக்கு வேறு மாதிரியும்

rail

புகையிரத சேவைகளை உடனடியாக வலுப்படுத்துமாறு கோரிக்கை

March 18, 2026

சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியினால் இலங்கையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, பொதுப் போக்குவரத்து சேவைகளையும், குறிப்பாக புகையிரத சேவையையும்

bima

மத்திய கிழக்கின் மோதலால் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாக வேண்டும் என்று எதிர்க்கட்சி விரும்புகின்றது; ஆனால் அது ஒருபோதும் நடக்காது

March 18, 2026

ராஜபக்ஷர்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியதால் அன்று கியூ.ஆர் முறைமை அமுல்படுத்தப்பட்டது.இரண்டு தலைவர்களின் தன்னிச்சையான செயற்பாடுகளினால் இன்று பொருளாதார முன்னெற்றத்துக்கு

Gotta

முன்னாள் ஜனாதிபதி கோட்டாவிடம் இரு மணிநேரம் விசாரணை!

March 18, 2026

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்த காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடித் தொடர்பில், இலஞ்ச

man

விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் தடையின்றி எரிபொருளை வழங்குவதற்காக விசேட பொறிமுறை

March 17, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில், மன்னார்

e

பாடசாலைகளின் அன்றாட நிர்வாகம்; கல்வி அமைச்சின் அறிவிப்பு

March 17, 2026

ரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், பாடசாலைகளின் அன்றாட நிர்வாகம் மற்றும் கற்றல் – கற்பித்தல் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக கல்வி,

hu

ஹொர்முஸ் நீரிணையூடாக பாதுகாப்புக்காக கப்பல்களைக் கோரும் ஈரான்

March 17, 2026

வளைகுடாவிலிருந்து ஹொர்முஸ் நீரிணையூடாக இந்தியக் கொடியுடைய அல்லது இந்தியா நோக்கி பயணிக்கும் கப்பல்களின் பாதுகாப்பான பயணத்துக்கான பேச்சுக்களின் அங்கமாக பெப்ரவரியில்

20

இலங்கை கிரிக்கெட் அணி உலக கிண்ணத்தை வென்று 30 ஆண்டுகள்

March 17, 2026

இலங்கை கிரிக்கெட் அணி 1996 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை வென்று 30 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற

Saji

எரிபொருள் இறக்குமதிக்கு அபாய மதிப்பீடு உள்ளதா? – எதிர்க்கட்சித் தலைவர்

March 17, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் நிலைமை காரணமாக இலங்கைக்கு மசகு எண்ணெய் மற்றும் எரிபொருள் இறக்குமதியில் ஏற்படக்கூடிய

in

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு எளிதான பணப் பரிவர்த்தனை வசதி

March 17, 2026

இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் எளிதாகவும் பாதுகாப்பாகவும் பணம் செலுத்துவதற்கான வசதியை மேம்படுத்தும் நோக்கில், NPCI International Payments Limited

gg

78 கிலோ போதைப்பொருள் கிளிநொச்சி கடற்பரப்பில் கைப்பற்றல்

March 17, 2026

கிளிநொச்சி டெவில்ஸ் பொய்ண்ட் கடல் பகுதியில் மிதந்த சுமார் எழுபத்தெட்டு (78) கிலோகிராம் மற்றும் முன்னூறு (300) கிராம் வெளிநாட்டு

Gch

பாதிக்கப்பட்ட பாலத்தை புனரமைக்க ஜப்பான் நிதியுதவி

March 17, 2026

ஜப்பான் தூதுவர் அகியோ இசொமட்டா, “அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான மானிய உதவி (GGP)” திட்டத்தின் கீழ் திட்டத்திற்கு நன்கொடை