நாட்டின் தற்போதைய சவால்களை ஜனாதிபதி வெல்வார்!

நாட்டின் தற்போதைய சவால்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் எனத் தான் நம்புவதாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை என்பது ஒரு உலகளாவிய ரீதியிலான சவாலாகும். இந்த நாடு மீண்டும் ஒரு வீழ்ச்சிக்குச் செல்லாமல் பாதுகாப்பதிலேயே நாம் எப்போதும் கவனம் செலுத்தி வருகின்றோம்.

எனவே, எந்தவொரு காரணத்துக்காகவும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அரசு தோல்வியடைய வேண்டும் என்று நாம் ஒருபோதும் நினைக்கவில்லை.

நாட்டின் மக்கள் தற்போது ஒரு புத்திசாலித்தனமான தீர்மானத்தை எடுத்துள்ளனர். பட்டதாரிகள், விசேட நிபுணர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் எனப் பல்துறை சார்ந்த அறிஞர்களை உள்ளடக்கிய 159 பேர் கொண்ட ஒரு பலமான குழுவை அவர்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வரலாற்றைச் சான்று காட்டிப் பேசக்கூடிய சிறந்த ஆற்றல் கொண்டவர். அத்துடன், நாடாளுமன்றத்தில் நீண்டகால அனுபவம் கொண்டவர்.

எனவே, மக்களால் தெரிவு செய்யப்பட்ட இந்த 159 அறிஞர்களுடனும் இணைந்து, அவர்களது ஆலோசனைகளைப் பெற்று இந்த நெருக்கடியை அவரால் வெற்றிகரமாகக் கையாள முடியும் என நாம் நம்புகின்றோம்.

எந்தவொரு அரசியல்வாதியும் இந்த நேரத்தில் நாடு வீழ்ச்சியடைவதையோ, மக்கள் மீண்டும் வரிசைகளில் நிற்பதையோ அல்லது விவசாயம், சுற்றுலா மற்றும் கைத்தொழில் துறைகள் பாதிக்கப்படுவதையோ விரும்பக் கூடாது.

இந்த அனைத்து துறைகளையும் பாதுகாத்து முன்னேற்றுவதே தற்போதைய அவசியமாகும் எனத் தெரிவித்துள்ளார்.

Iran

எரிசக்தி விநியோக அழுத்தங்களைக் குறைப்பதற்காக ஈரானிய எண்ணெய் மீதான தடைகளை தற்காலிகமாக நீக்கிய அமெரிக்கா!

March 21, 2026

அமெரிக்க – இஸ்ரேலிய போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிசக்தி விநியோக அழுத்தங்களைக் குறைப்பதற்காக, கடலில் உள்ள ஈரானிய எண்ணெயைக் கொள்முதல்

Coll

பவுசர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை?

March 21, 2026

இன்றும் (21) நாளையும் (22) இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், இன்றைய தினம்

Police_1

நாடளாவிய ரீதியில் விசேட சோதனை

March 21, 2026

பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் உள்ள வர்த்தக நிலையங்களை சோதனையிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது

Donal

எமக்கு ஆதரவு தராத நேட்டோ நாடுகள்‘கோழைகள்’ – டொனல்ட் ட்ரம்ப்

March 21, 2026

ஈரான் போரில் அமெரிக்காவுக்கு ஆதரவு தராத நேட்டோ நாடுகளை ‘கோழைகள்’ என அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இது

Eid

இன்று புனித நோன்புப் பெருநாள்

March 21, 2026

இலங்கை வாழ் முஸ்லிம் சகோதரர்கள் இன்று (21) புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். இறைத் தூதர் (ஸல்) அவர்கள் மதீனா

ri+

ரியாத் நகரில் மேலும் ஓர் இந்தியர் உயிரிழப்பு

March 21, 2026

சவூதி அரேபி​யா​வின் ரியாத் நகரில் ஈரான் தாக்​குதலில் இந்​தி​யர் ஒரு​வர் உயி​ரிழந்துள்ளார். இதன் மூலம் அமெரிக்கா – ஈரான் போரில்

ir

உலகெங்கிலும் உள்ள பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத் தலங்களைத் தாக்குவோம் – ஈரான்

March 21, 2026

உலகெங்கிலும் உள்ள பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத் தலங்களைத் தாக்குவோம் என ஈரான் அச்சுறுத்தியுள்ளதுடன், பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தொடர்ந்து தயாரித்து வருவதாகவும்

crim

யாழ். பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் மருமகனால் அடித்துக் கொலை!

March 21, 2026

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் அவரது மகளின் கணவரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வியாழக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.

har

பிரதமர் ஹரிணி அமரசூரிய அவசர அறிவிப்பு!

March 21, 2026

கடந்த அரசாங்க காலத்தில் ஜனாதிபதி செயலகத்தின் பயன்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமர

hie

வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள ஹெய்ட்டிக்கு 800 பாதுகாப்புப் படை வீரர்களை அனுப்ப சாட் அரசு முடிவு!

March 21, 2026

ஆபிரிக்க நாடான சாட் (Chad), வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள ஹெய்ட்டி (Haiti) நாட்டிற்கு 800 பாதுகாப்புப் படை வீரர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக

ravika

வடக்கிற்கு மகாவலி அதிகாரசபை தேவையில்லை – ரவிகரன்

March 21, 2026

கடந்த 1988ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை அரசாங்கங்களின் அனுசரணையுடன் மகாவலி அதிகார சபை வடக்கு மாகாணத்திற்கான அபிவிருத்தி என்னும் பெயரில்

his

ஹிஸ்புல்லா நிதியுதவியுடன் செயல்பட்ட பயங்கரவாத கும்பல் கைது

March 21, 2026

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) தேசிய பாதுகாப்பு அமைப்பினர், ஈரான் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பால் நிதியுதவி அளிக்கப்பட்டு இயங்கி