முன்னாள் முதல்பெண்மணி சிராந்தி ராஜபக்சகுறிப்பிட்ட காலத்திற்குள் நிதிகுற்றங்கள் தொடர்பான பொலிஸ் பிரிவில் ஆஜராகவிட்டால் அவர் பயணத்தடையை எதிர்கொள்ளநேரிடும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
மருத்துவசிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்காக சிராந்தி ராஜபக்ச 14 அவகாசத்தை கோரினார் அவர் குறிப்பிட்ட காலத்திற்குள் நாடு திரும்பாவிட்டால் பயணத்தடை விதிக்கப்பட்டு நாடு திரும்பும்வேளை அவர் கைதுசெய்யப்படலாம்.
விமானநிலையத்தில் அவர் கைதுசெய்யப்படலாம்.என அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பேச்சாளர் மருத்துவசிகிச்சையை அடிப்படையாக வைத்தே சிராந்தி எப்போது நாடு திரும்புவார் என்பதை தெரிவிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.