புதுடில்லியில் நடைபெற்ற ‘AI Impact 2026’ மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, தனது இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று (20) இரவு நாடு திரும்பினார்.
ஜனாதிபதி மற்றும் இலங்கை தூதுக்குழுவினர் இந்தியாவின் புதுடில்லியில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-196 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.