நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா ‘முதல் முதலாய் ‘ எனும் பெயரில் வெளியான சுயாதீன இசை அல்ப பாடலில் தோன்றி, நடனமாடி தனது கலை பயணத்தை தொடங்கியிருக்கிறார்.
இசையமைப்பாளரும், பாடலாசிரியருமான ரவிச்சந்திரன் இசையில் பின்னணி பாடகர் ஜீ. வி பிரகாஷ் குமார் பாடியிருக்கும் ‘முதல் முதலாய் ‘எனத் தொடங்கும் பாடலுக்கு ரிஷி தேவா, நடிகை கைரா ஆகியோர் இணைந்து நடனமாடியிருக்கிறார்கள். மெலோடியும் , றாப் இசையும் கலந்த இந்த பாடலை இசை கலைஞர் ஆதித்யா றாப் பாடியிருக்கிறார்.
சரிகம இசை நிறுவனம் வெளியிட்டிருக்கும் இந்தப் பாடலில் காதல் -அப்பாவித்தனம் – மறக்க இயலாத தருணங்கள்- ஆகியவை இனிமையான பாடல் வரிகளுடன் இணைந்து இருப்பதால்.. இசை ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.