இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து பாடும் ‘மாக்கரீனா..’ எனத் தொடங்கும் பாடலும், அதற்கு சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்தின் சிற்பங்களின் பின்னணியில் நடன புயல் பிரபுதேவாவின் ஆடலும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
எதிர்வரும் கோடை விடுமுறையில் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இயக்குநர் மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கத்தில் பிரபு தேவா, யோகி பாபு, அஜு வர்கீஸ் , அர்ஜுன் அசோகன், நான் கடவுள் ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ் லீ , லொள்ளு சபா சுவாமிநாதன், தீபா சங்கர் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘மூன் வாக்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ மாக்கரீனா..’ எனத் தொடங்கும் பாடலுக்கான காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.
இசை புயலின் இனிமையான குரல் – இந்தியாவின் மைக்கேல் ஜேக்சன் பிரபுதேவாவின் நடன அசைவுகள் – மாமல்லபுரம் சிற்பங்களின் பின்னணி- இவற்றின் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்தப் பாடல் ரசிகர்களுக்கு தேனினும் இனிய செவி அனுபவத்தை வழங்குவதுடன் குளுமையான பார்வை அனுபவத்தையும் வழங்கி வசீகரித்து வருகிறது.