தேசிய சொத்துக்களை அரசாங்கம் பாதுகாக்கத் தவறிவிட்டது; இலங்கை மின்சார சபை குறித்து சஜித் பிரேமதாஸ

தேர்தலுக்கு முன்னர் தேசிய சொத்துக்களைப் பாதுகாப்பதாகக் கூறி அதிகாரத்தைக் கைப்பற்றிய தற்போதைய அரசு, இன்று இலங்கை மின்சார சபையின் இறுதி ஊர்வலத்தை அறிவித்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நேற்று (09.03.2026 ) விசேட கூற்றொன்றை முன்வைத்து ஊடகங்கள் முன்பாக அவர் இக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அரசின் தற்போதைய நகர்வுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தலுக்கு முன்பு மின்சார சபையின் 23 ஆயிரம் தொழிலாளர்களை வீதியில் இறக்கி, எக்காரணம் கொண்டும் மின்சார சபையைத் தனியார்மயமாக்க விடமாட்டோம் என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உறுதியளித்தது.

ஆனால், இன்று அதிகாரத்தைப் பெற்றவுடன் அந்த வாக்குறுதியைத் தட்டிக்கழித்து, சபையைப் பல துண்டுகளாகப் பிரிக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

மின்சக்தித் துறை என்பது நாட்டின் தேசிய பாதுகாப்புடன் நேரடித் தொடர்புடையது எனவே, இதன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மிகவும் பொறுப்புணர்வுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

ஆனால் தற்போதைய அரசு தன்னிச்சையாகச் செயற்படுகின்றது அதிகாரப் போதையில் இருக்கும் ஆட்சியாளர்கள், தங்களை நம்பி வாக்களித்த 23 ஆயிரம் தொழிலாளர்களின் எதிர்காலத்தைப் பலிகடாக்கியுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் இன்று கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

மின்சார சபையில் சீர்திருத்தங்கள் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால், அந்தச் சீர்திருத்தங்கள் நிறுவனத்தையே இல்லாதொழிப்பதாக அமையக் கூடாது ஒரு தசாப்த காலமாக இந்த மறுசீரமைப்புகளை எதிர்த்து வந்தவர்கள், இன்று மக்கள் ஆணையை அப்பட்டமாகக் காட்டிக்கொடுத்துள்ளனர்.

ont

ஒன்ராறியோ மருத்துவமனைகளுக்கு கட்டமைப்பு நிதிக் குறைபாடு?

March 10, 2026

ஒன்ராறியோ முதல்வர் டக் பேர்ட் தனது எட்டாவது பட்ஜெட்டை முன்வைக்கும் முன், மாகாணத்தின் மருத்துவமனைகள் விரைவில் ஒரு பில்லியன் டொலர்

mah

மஹிந்தானந்த, நலின் பெர்னாண்டோ மேல்முறையீடு!

March 10, 2026

முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நலின் பெர்னாண்டோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணை இன்று (10)

arre

இரத்மலானையில் போதைப்பொருளுடன் பெண் கைது

March 10, 2026

இரத்மலானை பகுதியில் 100 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை பிராந்திய குற்ற விசாரணை பணியகத்தின்

sc

பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணம் இன்று முதல் உயர்வு!

March 10, 2026

எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் வாகனங்களின் கட்டணங்களை இன்று (10) முதல் நடைமுறைக்கு

pow

நாட்டின் சில பகுதிகளில் மின் தடை!

March 10, 2026

கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின்சார தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டம்

cru

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு: இலங்கைக்கு காத்திருக்கும் பாரிய நெருக்கடி

March 10, 2026

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக அதிகரித்து வருவதால், பண்டிகை காலம் வரை நாட்டில் எரிபொருள் விலை உயர்வை

e

ஐரோப்பா ஆயுத இறக்குமதியில் அதிக கவனம்?

March 10, 2026

முடிவில்லாத உக்ரைன் போரின் விளைவாக ஐரோப்பா ஆயுத இறக்குமதியில் அதிக கவனம் செலுத்தி வரும் அதேவேளையில், ஒரு வளர்ந்து வரும்

55

மணிலா சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளில் பிரதமர் ஹரிணி அமரசூரிய!

March 10, 2026

ஆசிய அபிவிருத்தி வங்கியின் விசேட அழைப்பின் பேரில், சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸின்

Aru

மத்திய கிழக்கில் காயமடைந்த இலங்கையர்கள் நலமுடன் உள்ளார்கள்!

March 10, 2026

மத்திய கிழக்கில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்களில் காயமடைந்த 4 இலங்கை பிரஜைகளும் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதுடன், தற்போது அவர்கள் நலமுடன் இருப்பதாக

s

வெப்பமான காலநிலை குறித்து சிறுவர்களுக்கு எச்சரிக்கை!

March 10, 2026

நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் நோய்கள் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு (Dehydration)

murder

நயினாதீவில் இரு பூசாரிகளுக்கிடையே மோதல்: ஒருவர் வெட்டிப் படுகொலை

March 10, 2026

யாழ்ப்பாணம்- நயினாதீவில் இரு பூசாரிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறு வாள் வெட்டில் முடிந்ததில் ஒருவர் பலியானார். குறித்த சம்பவம் நேற்று(9.3.2026) மாலை

isr

மனித உரிமைகள் கண்காணிப்பகம் இஸ்ரேல் குறித்து கடும் கண்டனம்

March 10, 2026

லெபனானின் தெற்குப் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகள் மீது இஸ்ரேலிய இராணுவம் சட்டவிரோதமாக ‘வெள்ளை பொஸ்பரஸ் ‘ (White Phosphorus)