தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் முன்னாள் தலைவர் / பணிப்பாளர் நாயகம் லலித் பியூம் பெரேரா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை, சாமபுர பகுதியில் அமைந்துள்ள காணி மற்றும் அங்குள்ள கட்டிடங்கள் அரசுக்குச் சொந்தமானவை எனக்கூறி, இடைக்காலக் குத்தகை ஒப்பந்தங்களைத் தயாரித்து, அதைத் தேசிய இளைஞர் சேவை மன்றத்திற்கு குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொடுத்துள்ளதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதற்காக மூன்றாம் தரப்பினருக்கு முறையற்ற மற்றும் சட்டவிரோதமான முறையில் இளைஞர் சேவை மன்றத்தின் நிதியிலிருந்து 38 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், பணிப்பாளர் சபையின் முறையான அனுமதியின்றி அக்கட்டிடத்தைச் புனரமைப்பு செய்வதற்காக இளைஞர் சேவை மன்றத்தின் நிதியிலிருந்து 13 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு முறையற்ற வகையில் பணம் செலுத்துவதற்கு வழிவகுத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 51 லட்சம் ரூபாய் இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் நேற்று(28) கைது செய்யப்பட்டிருந்தார்.

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட குற்றத்தடுப்புப் பொறுப்பதிகாரி கைது!

பொலிஸ் காவலில் இருந்த போது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர், ஹோமாகம பொலிஸ் நிலையக் காவலில் வைக்கப்பட்டிருந்த போது உயிரிழந்த சம்பவத்திற்காக அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக அவருக்கு மேலதிகமாக, அப்பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் சேவையும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் கிரிவத்துடுவை பிரதேசத்தைச் சேர்ந்த இஷார ஹர்ஷ குமார எனும் 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

பொலிஸாரின் கடுமையான தாக்குதல் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

images

ஆனந்தபுரத்தில் விட்டுச்செல்லப்பட்ட 300 க்கும் மேற்பட்ட போராளிகள் படுகொலை செய்யப்பட்டனர்!

October 30, 2026

இலங்கை இராணுவம் 2009 ஏப்ரல் மாதம் ஆனந்தபுரத்தைக் கைப்பற்றியபோது கடுமையாகக் காயமடைந்த நிலையில் ஒரே கட்டடத்துக்குள் விட்டுச்செல்லப்பட்ட 300 க்கும்

MediaFile_20261029_154716_954

இங்கிலாந்துக்கு எதிராக பவன் ரத்நாயக்க மீண்டும் அபார சதம்!

October 30, 2026

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் மும்முனை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் இளம்

pat

உலக புகழ்பெற்ற ஹொலிவூட் நடிகர் பெட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார்

October 30, 2026

புகழ்பெற்ற ‘ஸ்டார் டிரெக்'(Star Trek) நடிகர் பெட்ரிக் ஸ்டீவர்ட் தமது 86 வது வயதில் காலமானார். லொஸ் ஏஞ்சலஸில் உள்ள

lau

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு

October 30, 2026

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.நுகர்வோர் விவகார

Sajeewa metha watha

தடுப்புக் காவலில் கைதி உயிரிழப்பு: பொலிஸ் தரப்பில் சட்ட நடைமுறைகள் மீறப்பட்டுள்ளன!

October 30, 2026

ஹோமாகம பொலிஸ் நிலையத்தினால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்த இஷார என்ற நபர் கைது செய்யப்பட்ட விதம்

ca

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு தேசிய நிகழ்ச்சித் திட்டம்

October 30, 2026

இலங்கைப் பெண்களிடையே அதிகம் பதிவாகும் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது மற்றும் அது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக, பெண்

li

சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் திறனை இருமடங்காக அதிகரிக்க திட்டம்

October 30, 2026

ண்ட காலமாக நாட்டில் பயன்படுத்தப்பட்டு வந்த தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக, 2017 ஆம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் அடையாள

8

“ஆடம்பரத்திற்காக கடன் வாங்கினால் பெரும் நிதி நெருக்கடியில் தள்ளும்!” – முதல்வர் விஜய் அறிவுரை!

October 29, 2026

சென்னை: உலக சிக்கன நாளை முன்னிட்டுத் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் பொதுமக்களுக்கு மிக முக்கியமான ஒரு கோரிக்கையை முன்வைத்து

7

“ரெய்டுகளைக் கண்டு தி.மு.க.வின் கடைக்கோடித் தொண்டரின் கால் நகம் கூட அஞ்சாது!” – மு.க.ஸ்டாலின் பதிவு!

October 29, 2026

சென்னை: முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீடு உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

1200-675-27986933-thumbnail-16x9-mayor

“பேசாம மாமன்ற கூட்டத்தை கலைச்சிடுங்க!” – மேயர் பிரியா ஆவேசம்!

October 29, 2026

“‘சென்னை: சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மேயர் பிரியா, துணை

5

“காலை ஆபீஸ்… மாலை வீடு… அரசு ஊழியரா முதல்வர் விஜய்?” – எடப்பாடி பழனிசாமி கேள்வி!

October 29, 2026

மதுரை: அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக இருந்த நிலையில், தற்போதைய ஆறு மாத தவெக ஆட்சியில் பல்வேறு குளறுபடிகள்

4

“சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை திசை திருப்பவே என் வீட்டில் சோதனை” – கே.என்.நேரு பேட்டி!

October 29, 2026

திருச்சி: மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைத் திசை திருப்பவே தனது வீட்டில் சோதனை நடந்துள்ளது என்று முன்னாள்