தெஹ்ரானில் அமைந்துள்ள கமேனியின் பிரம்மாண்ட நிலத்தடிப் பதுங்கு குழி அழிப்பு

தெஹ்ரானில் அமைந்துள்ள ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவருக்குச் சொந்தமான இரகசிய ‘நிலத்தடி பதுங்கு குழி’ ஒன்றை தாம் அழித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் உரிமை கோரியுள்ளது.

ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவர் அலி கமேனி உயிருடன் இருந்தபோது அவருக்காக உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான நிலத்தடி பதுங்கு குழி ஒன்றை இலக்கு வைத்து பாரிய வான் தாக்குதலை நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.

சுமார் 50 இஸ்ரேலிய போர் விமானங்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டதாகப தெரிவிக்கப்படுகின்றது.

தெஹ்ரானின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த நிலத்தடி வளாகத்தின் மீது சுமார் 100 குண்டுகள் வீசப்பட்டு அவை முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலத்தடி வளாகம் தெஹ்ரான் நகரின் பல வீதிகளுக்குக் கீழ் நீண்டு பரந்திருப்பதாகவும், இதில் உயர்மட்டக் கூட்டங்களை நடத்துவதற்கான பிரத்தியேக அறைகள் மற்றும் பல நுழைவாயில்கள் இருந்தன எனவும் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

அலி கமேனி கொல்லப்பட்ட பின்னரும், ஈரான் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் இந்த நிலத்தடி வசதியைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததாக இஸ்ரேல் உரிமை கோரியுள்ளது.

இஸ்ரேல் உளவுத்துறையின் ‘பிரிவு 8200’ மற்றும் ‘பிரிவு 9900’ ஆகியன பல வருடங்களாக மேற்கொண்ட நுணுக்கமான திட்டமிடலின் பின்னரே இந்தத் தாக்குதல் மிகத் துல்லியமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யுத்த காலங்களில் அவசர காலத் தலைமையகமாகப் பயன்படுத்துவதற்காகவே இந்த அதிநவீன பதுங்கு குழி வடிவமைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.

mid

இலங்கையின் உணவுப் பாதுகாப்பு குறித்து அவசரக் கூட்டம்!

March 7, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக, இலங்கையின் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் ஏற்படக்கூடிய தாக்கத்தை

heat wa

நாட்டில் நிலவும் வெப்பம் குறித்து கடுமையான எச்சரிக்கை

March 7, 2026

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதன்படி, சப்ரகமுவ, வடமேல்

Srilankan air

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் ரத்து?

March 7, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும் நாளை நள்ளிரவு 11.59 மணி வரை சில

no

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வெற்றி!

March 7, 2026

வடக்கின் 119ஆவது சமரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிரடியாக வெற்றி பெற்றது. யாழ். மத்தியின் மைதானத்தில் வியாழக்கிழமை (05) ஆரம்பித்து

arre

போதைப்பொருளை தடுக்கும் தேசிய திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 1,073 பேர் கைது!

March 7, 2026

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று வெள்ளிக்கிழமை

ff

கசிப்புடன் இளைஞர் கைது!

March 7, 2026

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனைப் பகுதியில் 28,500 மில்லி லீற்றர் (28.5 லீற்றர் ) கசிப்புடன் 26

mazooth

பிராந்திய நாடுகள் மீது நடத்திய தாக்குதல்கள் தொடர்பில் மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!

March 7, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுக்கு பதிலடியாக பிராந்திய நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்கள் தொடர்பில், ஈரானிய ஜனாதிபதி

nep

நேபாளத்தில் பாலேந்திர ஷா பிரதமராகும் வாய்ப்பு?

March 7, 2026

நேபாளத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ராஷ்டிரிய சுதந்திர கட்சி பல தொகுதிகளில் முன்னிலை

ban

தெஹ்ரானில் அமைந்துள்ள கமேனியின் பிரம்மாண்ட நிலத்தடிப் பதுங்கு குழி அழிப்பு

March 7, 2026

தெஹ்ரானில் அமைந்துள்ள ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவருக்குச் சொந்தமான இரகசிய ‘நிலத்தடி பதுங்கு குழி’ ஒன்றை தாம் அழித்துள்ளதாக இஸ்ரேலிய

padd

பல குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ள குற்றவாளி பட்டுவத்தே சாமரவின் மனைவியின் வீடு மீது துப்பாக்கிச் சூடு

March 7, 2026

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான பட்டுவத்தே சாமர என்பவரின் மனைவியின் வீட்டின் மீது இன்று (07) அதிகாலை துப்பாக்கிச் சூடு

thaya

சுரேஷ் சாலேவை சந்திக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை – நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி

March 7, 2026

பொலிஸ் அறிக்கை ஒன்றை எடுத்து வராத எந்த நபருக்கும், அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு)

Her

கனடாவில் ஐரிஷ் பாரம்பரிய மாதக் கொண்டாட்டம்!

March 7, 2026

பிராம்ப்டன் நகரம் – ஐரிஷ் பாரம்பரிய மாதத்தை கொண்டாட குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. பிராம்ப்டன் நகரம் மற்றும் Rovers Club