தெல்தெனிய கொலைச் சம்பவத்தின் சந்தேகநபருடன் தொடர்புடைய பல நிதி மோசடிகளைப் பொலிஸார் அம்பலப்படுத்தியுள்ளனர்

கடந்த வாரம் தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபருடன் தொடர்புடைய பெருமளவிலான நிதி மோசடிகள் மற்றும் ஏனைய குற்றச் செயல்களின் பின்னணியை நுவரெலியா பொலிஸார் அம்பலப்படுத்தியுள்ளனர்.

நுவரெலியா தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால், நுவரெலியா பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகளுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட விசேட விசாரணை அறிக்கையிலேயே இந்த விபரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஜூன் 17ஆம் திகதி இக்கொலைச் சம்பவம் அறிக்கை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பிரதான சந்தேகநபரின் பின்னணி குறித்துப் பொலிஸார் நடத்திய தேடுதலின் போதே இப்புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

சந்தேகநபர் ஹொரம்பாவ, கொஸ்கொல்ல பகுதியைச் சேர்ந்தவர் எனப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். இந்த மோசடி நடவடிக்கைகளில் அவரது மனைவிக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்களை ஏமாற்றியமை, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை பெற்றுத்தருவதாகக் கூறி பணம் மோசடி செய்தமை மற்றும் வாகன இறக்குமதி தொடர்பான மோசடிகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், சந்தேகநபருக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

பொலிஸாரால் மேற்கோள் காட்டப்பட்டுள்ள நீதிமன்ற ஆவணங்களின்படி நிலுவையிலுள்ள சில வழக்கு விபரங்கள் வருமாறு:

  • கம்பஹா மேல் நீதிமன்றம் (வழக்கு இல. B 1893/19): திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 11,873,000 ரூபாய் மோசடி செய்தமை மற்றும் (WP CBG 8532) இலக்கமுடைய மோட்டார் வாகனத்தை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியமை.

  • அளுத்கடை (Hulftsdorp) நீதவான் நீதிமன்றம் இல. 05 (வழக்கு இல. B 98858/05/2018): திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 1,721,000 ரூபாய் மோசடி செய்தமை.

  • அளுத்கடை நீதவான் நீதிமன்றம் இல. 05 (வழக்கு இல. B 15191/05/2019): திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 1,376,000 ரூபாய் மோசடி செய்தமை.

  • திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றம் (வழக்கு இல. B 33176, 33174): வாகன இறக்குமதித் தொடர்பில் 2,200,000 ரூபாய் மோசடி செய்தமை.

  • அளுத்கடை நீதிமன்றம் (வழக்கு இல. B 7002/23): வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை பெற்றுத்தருவதாகக் கூறி 4,200,000 ரூபாய் மோசடி செய்தமை.

சந்தேகநபருக்கு எதிராக அளுத்கடை, ஹொரண மற்றும் கடுவெல உள்ளிட்ட நீதிமன்றங்களிலும் மேலதிக வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) இதற்கு இணையாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரின் தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி தரவுத்தளங்களைச் சரிபார்த்தபோது, அவர் ஏற்கனவே 2023 நவம்பரில் பேலியகொட பொலிஸாரினாலும் மோசடி விசாரணைப் பிரிவினராலும் மோசடிச் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் மற்றும் திருமணம் சார்ந்த நிதி மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் மற்றும் விசாரணைகளை எதிர்கொண்டுள்ள சந்தேகநபரின் மனைவி குறித்தும் விசாரணைகள் தொடர்கின்றன.

yasmin sooka

ஹெய்ட்டிக்கு படையினரை அனுப்பிவைக்கும் தீர்மானம்: தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் அமையக்கூடாது – சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தல்

June 30, 2026

ஹெய்ட்டியில் இலங்கைப் படையினரால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும். அத்தோடு தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் தற்போது மீண்டும்

Pillayan-733199

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

June 30, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையானை எதிர்வரும் ஜூலை

chemma7

செம்மணி மனிதப் புதைக்குழி: உண்மைகள் புறக்கணிக்கப்படுகின்றன – எஸ்.சிறிதரன் குற்றச்சாட்டு

June 30, 2026

செம்மணி மனிதப் புதைக்குழி மற்றும் ஏனைய மனிதப் புதைகுழிகள் குறித்து மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ஷ குறிப்பிடும் விடயங்களை

Pillayan-733199

நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பிள்ளையான்

June 30, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையான் இன்று (30)

court-judge-hammer-gavel-696x398

யாழில். தனியார் காணியை அரச காணி என பறிக்க முயற்சி ?

June 30, 2026

தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வசாவிளான் குட்டியாபுலம் பகுதியில் உள்ள 2.5 ஏக்கர் தனியார் சொத்தான காணியை, கடந்த செப்டெம்பர்

whats

தொலைபேசி எண் இல்லாமல் வட்ஸ்அப்?

June 30, 2026

உங்கள் தொலைபேசி எண்ணை மற்றவர்களுக்குத் தெரியாமல், ஒரு பயனர்பெயரை (username) மட்டும் பயன்படுத்தி மற்றவர்களுடன் இணைவதற்கான வசதியை வட்ஸ்அப் அறிமுகப்படுத்த

f

சீன தொழிலதிபரான பெண் 42 லட்சம் ரூபாய் சிகரெட்டுகளுடன் கைது

June 30, 2026

சுமார் 42 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட் தொகையை, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வர முயன்ற

Fuel_1200px_22_10_17

எரிபொருள் விலைகளைக் குறைத்தது அரசாங்கம்: புதிய விலை விபரங்கள்

June 30, 2026

இலங்கையில் பொதுமக்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில், தெரிவு செய்யப்பட்ட சில எரிபொருள் வகைகளின் விலைகளை உடனடியாகக் குறைப்பதற்குஇலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

eiff

ஈபிள் கோபுரத்தை தாக்கிய மின்னல்

June 30, 2026

பாரிஸ் நகரில் நிலவிய கடும் இடியுடன் கூடிய மழையின் போது, ஐகான் என அழைக்கப்படும் ஈபிள் கோபுரத்தை மின்னல் தாக்கியுள்ளது.

manoga

தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆளும் தரப்பு எமக்கு கற்பிக்கத் தேவையில்லை

June 30, 2026

தேர்தலில் பெண்களுக்கு போதுமான இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆளும் தரப்பினர் எமக்கு பாடம் கற்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

Pol

பெரிய அளவிலான இலஞ்ச வலைப்பின்னல் தொடர்பான ஆதாரங்கள் ஆராய்வு

June 30, 2026

பெரிய அளவிலான இலஞ்ச வலைப்பின்னல் தொடர்பான ஆதாரங்கள் தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதால், சிறைபிடிக்கப்பட்டுள்ள நதுன் சிந்தக விக்கிரமரத்ன எனும் ‘ஹரக்

ff

புதிய அரசியலமைப்பு; இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழர் தரப்பின் நிலைப்பாட்டினை கூட்டாக முன்வைக்கத் தீர்மானம்

June 30, 2026

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் ஆரம்பிக்கப்படும்போது இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழர் தரப்பின் நிலைப்பாட்டினைக் கூட்டாக முன்வைப்பதற்கான தீர்வுத்திட்ட வரைவைத் தயாரித்தல் மற்றும்