தீயசக்தி திமுக.. பாசிச பாஜக.. அக்குவேறாக பிரித்து எறிவோம்! “விசில்” சின்னத்திற்கு வாக்களிக்க விஜய் உருக்கமான வேண்டுகோள்!

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தல் நெருங்கும் வேளையில் தமிழக மக்களுக்கு மிக முக்கியமான மற்றும் உணர்ச்சிகரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது அரசியல் எதிரிகளையும், கட்சியின் எதிர்காலத் திட்டங்களையும் மிகத் தெளிவாக அவர் விளக்கியுள்ளார்.

அந்த அறிக்கையில் விஜய் கூறியிருப்பதாவது: “என் நெஞ்சில் குடியிருக்கும் என் சொந்தங்களாகிய தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம். ஆசையோடும் அன்போடும் எனக்காக எல்லாவற்றையும் அள்ளி அள்ளித் தந்த உங்களோடு உங்கள் விஜய் மனம்விட்டுப் பேசவே இக்கடிதம்.

எனக்கு எல்லாமும் தந்த என் சொந்தங்களான தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்த நாள்முதல் சொல்லொணா நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் சொல்லவியலா வேதனைகளையும் இதுவரை நமக்கு விளைவித்தே வந்தவர்கள் வேறு யார்?. நமது அரசியல் எதிரியான மக்கள் விரோத தீயசக்தி திமுகவும் கொள்கை எதிரியான மற்றும் பலருடன் களம் கானும் பிளவுவாத சக்தியான பாஜகவும் என்று நம் மக்களே அறிவர்.

மக்களுக்காக அவர்தம் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்த இந்த விஜய், பாசிச மனநிலை கொண்ட ஜனவிரோதக் கட்சிகளின் அழுத்தங்களுக்கா அடிபணிவான்?. திசைதிருப்பல் முதலீட்டுக் கழகங்களின் நெருக்கடிகளுக்கும் நிர்பந்தங்களுக்கும் குனிந்து கூழைக் கும்பிடா போடுவான்?. ஆதாயங்களைக் காட்டி உங்கள் மகனை அடக்கிவிடவும் முடியாது. அதிகாரங்களை ஏவி உங்கள் சகோதரனை மிரட்டி விடவும் இயலாது.

இறைவன் அருளால் இயற்கையின் துணையுடன் மாபெரும் பெண்கள் சக்தி, மாபெரும் இளைஞர் சக்தி, மாபெரும் மக்கள் சக்தியுடன் உலகெங்கும் உள்ள நமது தோழர்களின் பேராதரவுடன் முதன்மை அரசியல் சக்தியாகக் களத்திற்கு வந்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தமிழக மக்கள் நலன் சார்ந்த நோக்கத்தையும் அதன் தாக்கத்தையும் எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது என்பதை வரும் தேர்தலில் நம் மக்களே அவர்களுக்கு சரியான பாடம் புகட்டி உணர்த்துவர்.

நம்மை எள்ளி நகையாடியக் கூட்டம் மட்டுமன்று, இந்த நாடே அறியும், அளக்கமுடியாத ஆழ்கடல் – விலக்க முடியாத விரிவானம் த.வெ.க என்று. நேர்மையின் நெருப்புக்கோளம் – மக்களின் நெஞ்சில் நீக்கமறக் குடியிருப்பது த.வெ.க என்று. சமூகநீதிக் காவலரண் – ஜனநாயகப் பேரரண் த.வெ.க என்று. இப்படிப்பட்ட த.வெ.கவை ஊழல் விஷ சக்திகளாலா வீழ்த்த முடியும்?.
பாசிச சக்திகளாலா பகைவெல்ல முடியும்?.

மக்களே…மீண்டும் சொல்கிறேன். இத்தனை நெருக்கடிகளையும் இத்தனை நிர்பந்தங்களையும் இத்தனை வேதனைகளையும் உங்கள் விஜய் தாங்கிக்கொண்டு நிற்க ஒரே ஒரு காரணம்தான் உண்டு. அது உங்களின் உயர்தனி உள்ளன்பு மட்டும்தான். எந்த அரசியல் கட்சி முன்புலமோ பின்புலமோ இன்றி அரசியலுக்கு வந்த என்னை ‘நீ வாப்பா’… ‘நீ வா தம்பி’… ‘நீ வாண்ணா’… ‘நீ வா நண்பா’… ‘நீ வா தோழா’… ‘நாங்க பாத்துக்கறோம்’… என்ற உங்களின் பேரன்பும் பேராதரவும் மட்டுமே என்னை இயக்கும் மாபெரும் உந்துசக்தி என்பதே உண்மை.

இப்போதும் சொல்வேன். எப்போதும் சொல்வேன். உங்களையும் என்னையும் இந்த உலகத்தில் எந்த அதிகார சக்தியாலும் எந்த அராஜக சக்தியாலும் எந்த தீயசக்தியாலும் எந்த பாசிச சக்தியாலும் எந்த ‘மற்றும் பலர்’ சக்தியாலும் பிரிக்கவே இயலாது. அப்படிப் பிரிக்க நினைக்கும் அனைத்து சக்திகளையும் மக்கள் அக்குவேறு ஆணிவேறாகத் தனித்தனியாகப் பிரித்து, தூக்கி வீசி எறியப் போவது உறுதி. பணத்தை மட்டுமே நம்பி தத்தம் சுயலாபங்களுக்காக அரசியல் களமாடும், எதிர்வரும் நம் தலைமுறையின் கனவுகளை அடகு வைக்கத் துடிக்கும் அடிமை அரசியல் சூதாடிகளின் வேறு எந்தச் சின்னத்திற்கு நீங்கள் வாக்களித்தாலும், பிளவுவாத சக்திகளுக்கான மறைமுக அல்லது நேரடி ஆதரவாக மட்டுமே அது மாறும்.

ஆகவே, எப்போதும்போல அடைமழையாக இந்த அரசியல் சூதாடிகளின் ஊழல் – லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று, நீங்கள் அனைவரும் திருவிழாக் கோலம் பூண்டு, விசில் புரட்சிக்குத் தயாராகி, குடும்பம் குடும்பமாக சென்று வாக்களிக்க வேண்டிய, எவ்வித மறுசிந்தனைக்கும் இடம் தராத ஒற்றைத் தேர்வாக “விசில் சின்னம்” மட்டுமே இருக்க வேண்டும் என உங்களை இருகரம் கூப்பி வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

வாகை சூடுவோம்.
வரலாறு படைப்போம்.
வெற்றி நிச்சயம்..” எனத் தெரிவித்துள்ளார்.

#Vijay #TVK #TVKVijay #WhistleSymbol #TamilNaduElection2026 #ThalapathyVijay #TVKPolitics #VoteForWhistle #AntiDMK #AntiBJP #TamilPolitics #PoliticalChange #VijaySpeech #TVKWave #VagaiSooduvom #TamilNaduElections #YouthIconVijay #WhistleRevolution #SocialJustice #ViralNews

Screenshot 2026-04-21 143137

சென்னை என்றுமே தி.மு.க.வின் கோட்டை! “தமிழ்நாடு வெல்லும்” – பிரசாரத்தின் இறுதி நாளில் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சிப் பதிவு!

April 21, 2026

சென்னை, தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடையும் நிலையில், திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின்

qr

கியூ.ஆர் குறியீட்டு முறைமை தொடர்பில் புதிய அறிவிப்பு

April 21, 2026

இலங்கையில் தற்போதைய கியூ.ஆர் குறியீடு முறையின் கீழேயே எரிபொருள் விநியோகம் தொடரும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.

east 20261

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள்-ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அந்த நாளின் வலி இன்னும் ஆறவில்லை.-.உண்மை நீதியை நிலைநாட்டவேண்டும் – ஐநாவின் பிரதிநிதி

April 21, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் நடந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அந்த நாளின் வடுவை நாடு இன்னும் சுமந்து

easter

உண்மை கண்டறியப்பட்ட பின்னரே மன்னிப்பு சாத்தியம்: வத்திக்கான் தூதுவர் வலியுறுத்தல்

April 21, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னாலுள்ள உண்மை நிலைநாட்டப்பட்ட பின்னரே, அத்தாக்குதல்களை நடத்தியவர்களை மன்னிப்பது குறித்துச் சிந்திக்க முடியும் என இலங்கைக்கான

675177459_1497864805036429_5112534639948039167_n

“பிரேமலதா நமது கூட்டணிக்குத்தான் வேலை செய்கிறார்!” – எடப்பாடியில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!

April 21, 2026

சேலம், சேலம் மாவட்டம் எடப்பாடியில் 2-வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

fa

நெற்பயிர்ச் செய்கை பாதிப்பு; விவசாயிகளுக்கு 1,200 மில்லியன் ரூபா இழப்பீடு!

April 21, 2026

மாத்தறை மாவட்டத்தில் குடிநீருடன் கடல் நீர் கலப்பதைத் தடுப்பதற்காக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் 2019ஆம் ஆண்டு

japp

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படக்கூடும்?

April 21, 2026

ஜப்பானில் மீண்டும் ஒரு பயங்கர நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுனாமி எச்சரிக்கை மீளப் பெறப்பட்டதைத்

prema

பிரேமலால் ஜயசேகர எம்.பி. கைது

April 21, 2026

‘சொக்கா மல்லி’ என அழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

G_Q4Ze7WQAAHCyq

தீயசக்தி திமுக.. பாசிச பாஜக.. அக்குவேறாக பிரித்து எறிவோம்! “விசில்” சின்னத்திற்கு வாக்களிக்க விஜய் உருக்கமான வேண்டுகோள்!

April 21, 2026

சென்னை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தல் நெருங்கும் வேளையில் தமிழக மக்களுக்கு மிக முக்கியமான மற்றும் உணர்ச்சிகரமான

Malcolm-Cardinal-Ranjith

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை; முட்டுக்கட்டைகள் குறித்து கர்தினால் ரஞ்சித் எச்சரிக்கை

April 21, 2026

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னேற்றமடைந்து வருவதாக கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால்

Mid photos new.00_01_08_07.Still034_

சரித்திரத்தில் சத்தியம் தோற்றதாக செய்தியில்லை! “மாற்றத்திற்கு ஒரே வழி நாம் தான்” – சீமான் உருக்கம்

April 21, 2026

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் உச்சகட்டப் பரப்பை எட்டியுள்ளது. 234

IRAN ARMY111

போர்க்களத்தில் ‘புதிய வியூகங்களை’ (New Cards) வெளிப்படுத்தத் தயாராகிறது ஈரான்

April 21, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்கு இன்னும் சில நேரங்களே உள்ள நிலையில், மேலதிக