திருமணம் பற்றி நடிகை சாய் பல்லவி…

நடிகை சாய் பல்லவி ஹிந்தி சேனல் ஒன்றில், தனது வருங்கால கணவர் பற்றி மனம் திறந்து பேசியது , தற்போது ஊடகங்களில் செய்தியாக மாறி உள்ளது. மருத்துவக் கல்லூரி மாணவியான சாய் பல்லவி, பல சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் பங்கு பெற்று தனது நடன திறமையின் மூலம் புகழ்பெற்றார். அதன் பின்னர் பல யுடியூப் சேனல்களில் குறும்படங்களில் நடித்துக் கொண்டிருந்த அவருக்கு ‘பிரேமம் ‘ படத்தின் மூலம் வெள்ளித்திரை வாய்ப்பு கிடைத்தது. தனது முதல் திரைப்படத்திலேயே சாய் பல்லவி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

பிரேமம் படத்தில் அவர் நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. பிரேமம் திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு மலையாள திரைப்படங்களிலும் , மற்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் வாய்ப்பு கிடைத்து சாய் பல்லவி முன்னணி நடிகையாக மாறியிருந்தார்.

தெலுங்கிலும் சாய் பல்லவி நடித்த திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெற அவருக்கு பாலிவுட் கதவு திறந்தது. தற்போது சாய் பல்லவியின் காட்டில் அடைமழை பெய்ய தொடங்கி உள்ளது. ஹிந்தியில் ஏற்கனவே அவர் அறிமுகமாக இருந்தாலும் , தற்போது இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படமான இராமாயணத்தின் 2 பாகங்களிலும் அவர் நடித்து முடித்துள்ளார்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் சாய் பல்லவி நடிக்கும் ‘ஓம்’ திரைப்படத்தில் ட்ரைலர் வெளியானதில் அவரது தோற்றத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதே நேரம் மணிரத்தினம் இயக்கி வரும் ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகள் நிலவுகிறது.தொடர்ச்சியாக சாய் பல்லவி பெரிய திரைப்படங்களில் நடித்து வருவதால் அவரது மார்க்கெட் எகிறி உள்ளது. அமிதாபச்சன் தொகுப்பாளராக இயங்கும் இந்தியாவில் பிரபலமான ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியில் சாய் பல்லவி , ரன்பீர் கபூருடன் கலந்து கொண்டார். இந்த எபிசோட் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன் சாய் பல்லவியிடம் அவரது எதிர்கால கணவர் குறித்த எதிர்பார்ப்புகளை பற்றி கேள்வி எழுப்பியுள்ளார்?

அதற்குப் பதிலளித்த சாய் பல்லவி, “எனது தனிப்பட்ட சுதந்திரத்தையும் எனது தொழில் வாழ்க்கையை மதிக்கக்கூடிய நபராக அவர் இருக்க வேண்டும். எனது வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக சுதந்திரமாகவும் தற்சார்பு மிக்கதாகவும் நான் நிர்வாகிக்க , அவர் ஆதரவு அளிக்க வேண்டும். என்னுடைய விருப்பங்களை மதித்து என்னுடைய லட்சியங்களை அடைவதற்கு துணையாக இருப்பவரையே நான் தேர்ந்தெடுக்க விரும்புகிறேன்.

ஒரு மதிப்புமிக்க உறவில் இருக்கும் இருவருக்கும் பரஸ்பர நம்பிக்கையும் மரியாதையும் மிகவும் அவசியம் . என் வருங்கால கணவர் நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவராகவும் இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அவருக்கு நன்றாக சமைக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

IMG_0928

வாட்ஸ்அப்பில் இலட்சக்கணக்கில் மோசடி: பெண் கைது

October 31, 2026

வாட்ஸ்அப் குழு மூலம் பரிசுப் பொதி தருவதாகக் கூறி இலட்சக்கணக்கில் பண மோசடி செய்த பெண் கைது! ​வாட்ஸ்அப் குழு

IMG_0927

மன்னாரில் உணவகத்தில் சோதனை ! காத்திருந்த அதிர்ச்சி!

October 31, 2026

மன்னார் நகரில் இயங்கி வந்த உணவகம் ஒன்றில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனையில் பல்வேறு சுகாதாரக் குறைபாடுகள்

nay

சூப்பர் ஸ்டார் ‘தர்மன்’ படத்தில் நயன்தாரா?

October 31, 2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ‘தர்மன்’ திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்திருப்பது தமிழ் சினிமா ரசிகர்களின்

sa

திருமணம் பற்றி நடிகை சாய் பல்லவி…

October 31, 2026

நடிகை சாய் பல்லவி ஹிந்தி சேனல் ஒன்றில், தனது வருங்கால கணவர் பற்றி மனம் திறந்து பேசியது , தற்போது

sun

ஜெயிலர் – 2 வசூலை மறைமுகமாக தாக்குகிறாரா சுந்தர்.சி

October 31, 2026

இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரங்களை பற்றி அவரது கருத்துக்களை தெரிவித்து இருந்தார். அவரது

at

ATM Button ஏன் எப்போதுமே இரும்பில் இருக்கு?

October 31, 2026

நம்மில் பலரும் தற்போது பணம் எடுப்பதற்காக ATM இயந்திரங்களை அடிக்கடி பயன்படுத்துகிறோம். இயந்திரத்தில் கார்டை போட்டு ரகசிய எண்ணை அழுத்திப்

sp

விண்வெளியில் ரஷியா – அமெரிக்கா; புதிய செய்தி!

October 31, 2026

KOSMOS 2612 என்ற ரஷிய சாடலைட் ICEYE – X36 என்ற அமெரிக்க வணிக விண்கலத்தின் அருகெ சென்று SYNTHETIC

child-abuse-copy

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி விற்பனை; 30 வருட சிறைத்தண்டனை

October 31, 2026

பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை மற்றும் சிறுமியை பணத்திற்காக விற்பனை செய்தமை தொடர்பில் பாணதுறை மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட

h

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

October 31, 2026

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் ஓய்வுபெற்ற நீதியரசர் வி. கே. மலல்கொட ஜனாதிபதி அநுர குமார

Jo

வடக்கு ஆளுநர் வேதநாயகன் மீது ஊழல் குற்றச்சாட்டு; விசாரணை செய்யுமாறு ஜோசப் ஸ்டாலின் முறைப்பாடு

October 31, 2026

தற்போதைய வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் யாழ் மாவட்ட அரச அதிபராக கடமை ஆற்றிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில்

chan

மீன்பிடித்துறை அதிகாரிகளுக்கு மின்சார மோட்டார் சைக்கிள்கள்; இந்தியாவும் இலங்கையும் ஒப்பந்தம்!

October 31, 2026

இலங்கையின் மீன்பிடித்துறை கள உத்தியோகத்தர்களுக்கு 430 மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்குவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய

af

கனடாவின் தேசிய பாதுகாப்பு: புதிய மூலோபாயத் திட்டம் வெளியீடு!

October 30, 2026

உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், இணையத் தாக்குதல்கள், வெளிநாட்டுத் தலையீடுகள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வரும் நிலையில், கனடாவின்