திருகோணமலைக்கும் இஸ்ரேலியர்களை கொண்டுவருவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றதா?

கிண்ணியா பிரதேச செயலகப்பிரிவு காணிகளை சுற்றுலா துறைக்கு எடுத்துக்கொண்டுள்ளதன் மூலம் அருகம்பையில் இஸ்ரேலியர்களின் ஆதிக்கம் இருப்பதுபோன்று திருகோணமலைக்கும் இஸ்ரேலியர்களை கொண்டுவருவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட எம்.பி. இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் இடையீட்டு வினா ஒன்றை எழுப்பியே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

கிண்ணியா பிரதேச செயலகப்பிரிவில் பல்கலைக்கழக கல்லூரி ஒன்றை நிறுவுவதற்காக காணி சீர் திருத்த ஆணைக்குழுவினால் 13ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டு, 2018ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தில் 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் தற்போது கைவிடப்பட்ட நிலையில் உள்ளது .

தற்போது திடீரென இந்த காணியை சுற்றுலா துறைக்கு எடுத்துக்கொண்டதால் , மக்கள் மத்தியில் ஒரு அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த டிசம்பர் மாதம் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த பிரதி அமைச்சர் ஒருவர் இஸ்ரேலுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அதன் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் அருகம்பையில் எவ்வாறு இஸ்ரேலியர்களின் ஆக்கிரமிப்பு இருக்கின்றதோ, அதேபோன்ற திருகோணமலை சுற்றுலா பிரதேசத்தை அபிவிருத்தி செய்து, இஸ்ரேலியர்களின் ஆதிக்கத்தை திருகோணமலையிலும் பதிக்க வேண்டும் என்பதற்காக செய்கின்ற ஒரு நடவடிக்கையா என்ற சந்தேகம் எமது மக்கள் மத்தியில்எழுந்துள்ளது

நாங்கள் அரசியல் செய்வதாக இருந்தால், இதனை வைத்துக்கொண்டு அரசியல் செய்திருக்கலாம். ஆனால் நாம் அவ்வாறு செய்யவில்லை. திருகோணமலை மாவட்டத்தில் மாணவர்கள் மிகவும் கஷ்ட நிலையில் இருக்கிறார்கள். அதனால் பல்கலைக்கழக கல்லூரி கட்டிடத்தை தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையின் பயிற்சிகளை முன்னெடுக்க பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால் தற்போது இந்த பிரதேசத்தில் யானைகளின் அச்சுறுத்தல் இருப்பதால், தொழிற் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த பிரதேசம் பொருத்தம் இல்லை எனத் தெரிவிக்கின்றனர். திருகோணமலை மாவட்டத்தை பாெறுத்தவறை 80 வீதமான பிரதேசங்கள் யானை அச்சுறுத்தல் இருக்கும் இடங்களாகும். அதற்கான ஒரு தீர்வை வழங்க வேண்டும் என்றார்.

pla

நிறுத்தப்பட்டிருந்த மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்று

ai

ஆந்திர மாநிலத்தில் AI வழங்கிய போலி தீர்ப்புகள்?

March 4, 2026

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொத்துத் தகராறு வழக்கு ஒன்று விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்தச் சொத்தை ஆய்வு செய்ய

d

மோசடி வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் சுற்றிவளைப்பு

March 4, 2026

ஜப்பான் மொழிக் கற்கை நிலையமொன்றை நடத்துவதாகக் கூறி, ஜப்பானின் கட்டுமானத் துறை, ஹோட்டல் துறை மற்றும் சாரதிப் பணிகளுக்காக ஆட்களை

kottaga

8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் போராட்டம்

March 4, 2026

யுலிபீல்ட் தோட்டத் தொகுதிக்குட்பட்ட யதன்பிரிவு தோட்ட மக்கள், 08 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியின்

zelen

மத்திய கிழக்குப் போர்; ஏவுகணைகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் – உக்ரைன் ஜனாதிபதி

March 4, 2026

மத்திய கிழக்கு போர் காரணமாக உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகளைக் கண்டறிவது கடினமாகலாம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

Vasantha Athukorala

ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு – பேராசிரியர் வசந்த அத்துகோரள

March 4, 2026

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின்

Nalin

ஊடக வல்லுநர் நிறுவனச் சட்ட வரைவு உருவாக்கம் – சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

March 4, 2026

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்துமாறு , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அனைத்து ஊடக

Sl E

சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறே எந்தவொரு சட்டமும் இலங்கையில் அமையவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

March 4, 2026

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய சட்ட முன்மொழிவின் தயாரிப்புப்பணிகளை உன்னிப்பாக அவதானித்துவருகிறோம். எனினும் புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு

kumara

அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது

March 4, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது. எரிபொருள் விநியோக

Andreas

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மாகாணசபைத்தேர்தல்கள் குறித்து இன்று அரசிடம் பேசுவதாக நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

March 4, 2026

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துதல் என்பவற்றில் தொடரும் காலதாமதம் உள்ளடங்கலாக தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் வெளிப்படுத்திய மனித உரிமைகள்சார்

Nish

இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம் வாக்காளர்களும் ஆத்திரமடைந்துள்ளார்கள் – நிசாம் காரியப்பர்

March 4, 2026

ரானுக்கு எதிராக செயற்பட்ட தரப்பினருக்கு எதிராக ஜனாதிபதி ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்காததையிட்டு இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம்

eu

உலகப் பொருளாதார பாதிப்பு: ஐரோப்பிய ஒன்றியம் – வளைகுடா கவுன்சில் அவசர பேச்சுவார்த்தை

March 4, 2026

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் விசேட காணொளி மாநாடு (EU) மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC) வெளியுறவு