மதுரை:
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்கம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று மதுரையில் தொடங்கி வைத்தார்.
த்ரிஷா ரசிகர்கள் போஸ்டர்:
இந்நிலையில், முதலமைச்சர் விஜய்யை வரவேற்று மதுரை மாநகர் முழுவதும் த்ரிஷா நற்பணி மன்றத்தினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன. அந்தப் போஸ்டரில், ‘தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தாய்மாமன் இல்லை என்று வருத்தப்படும் தாய்மார்களுக்குத் தன்னையே தாய்மாமன் என்று கூறி மகிழ்ச்சியடையச் செய்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எழுத்துப் பிழைகள்:
முதலமைச்சர் விஜய் குழந்தையைக் கையில் ஏந்தியிருக்கும் படமும், நடிகை த்ரிஷாவின் படமும் போஸ்டரில் அச்சிடப்பட்டுள்ளன. எனினும், ‘மனமார்ந்த நன்றி’ என்பதற்குப் பதிலாக ‘மணமார்ந்தி நன்றி’ என்பது உள்ளிட்ட சில எழுத்துப் பிழைகள் இடம்பெற்றிருப்பதும் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அரசியல் பரபரப்பு:
நடிகை த்ரிஷா தவெகவில் இணையவுள்ளதாகவும், எதிர்வரும் திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வரும் சூழ்நிலையில், த்ரிஷா ரசிகர்கள் ஒட்டியுள்ள இந்த விளம்பரப் போஸ்டர் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.
#CMVijay #Trisha #ThaimamanThangaMothiram #Madurai #TVK #TNPolitics #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive