தர்மேந்திர பிரதான் பதவி விலகல்: அறவழிப் போராட்டத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றி – திருமாவளவன்!

சென்னை:

இந்திய மத்திய அரசு நீட் தேர்வை முற்றாக கைவிட வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு நீட் விலக்கு சட்டத்தை இயற்றக் கோரியும் அதே நாளில் சென்னையில் மட்டும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :- வினாத்தாள் கசிவுகளுக்குப் பொறுப்பேற்றுக் கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகியிருப்பது மாணவர்களின் சார்பில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியால் முன்னெடுக்கப்பட்ட அறவழிப் போராட்டத்துக்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகும். தர்மேந்திர பிரதான் விலகலையடுத்து அப்பொறுப்பில் கல்வியாளர் ஒருவரைக் கல்வி அமைச்சராக நியமிக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்துகிறோம்.

“நீட் தேர்வு தேவையில்லை, மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை மாநில அரசுகளே நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும்” எனப் பல ஆண்டுகளாக விசிக உள்ளிட்ட பல கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. கடந்த திமுக ஆட்சியில் அதற்காக நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் அன்றைய கவர்னர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டிருந்தார். நீதிமன்றம் தலையிட்டதால் அதைத் திருப்பி அனுப்பினார். மீண்டும் அது நிறைவேற்றப்பட்டு அவருக்கு அனுப்பினார். அதை சட்டத்துக்குப் புறம்பாக ஜனாதிபதிக்கு அனுப்பினார். அங்கு அவர் கிடப்பில் போட்டிருந்தார். சுப்ரீம்கோர்ட்டு தலையிட்டபின் அதைத் திருப்பி அனுப்பினார். இவை யாவற்றுக்கும் பாஜக அரசே காரணம். கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்துக்குப் பிறகு ‘நீட் தேர்வே வேண்டாம்’ என்ற தமிழ்நாட்டின் நிலைபாட்டை இப்போது மேலும் பல மாநில அரசுகளும், கட்சிகளும் வழிமொழியத் தொடங்கியுள்ளன. எனவே, ஒட்டுமொத்தமாக நீட் தேர்வு முறையை ரத்துசெய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். ஏனெனில், நீட் தேர்வு என்பது அனைத்துத் தரப்பினரின் விருப்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது அல்ல. சுப்ரீம்கோர்ட்டில் அனில் ஆர்.தவே என்ற ஒரே ஒரு நீதிபதியின் விருப்பத்தின் அடிப்படையில் நடைமுறைக்கு வந்த ஒன்றாகும். மருத்துவக் கல்வியை பாதுகாக்க நீட் தேர்வை முற்றாக ஒழிப்பதுதான் ஒரே வழி. எனவே, எதிர்வரும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின்போது இதற்கான சட்ட மசோதாவைக் கொண்டுவந்து சட்டமாக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம். கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நடந்து வந்த மாணவர் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தும்; நீட் தேர்வை இந்தியா முழுவதும் ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு நீட் விலக்கு சட்டத்தை இயற்றக் கோரியும் விசிக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஜூலை 27 திங்கட்கிழமையன்று ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தர்மேந்திர பிரதான் பதவி விலகியிருப்பதால், அந்த ஆர்ப்பாட்டம் அதே நாளில் சென்னையில் மட்டும் எனது தலைமையில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

#Thirumavalavan #DharmendraPradhan #VCK #NeetExam #Chennai #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #TamilNaduPolitics #StudentProtest #PoliticalNews #TamilNewsLive

Murder

பெல்லன்வில படுகொலை: பின்னணி அம்பலம்!

July 26, 2026

பெல்லன்வில உணவக உரிமையாளரைச் சுட்டுக்கொன்ற துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் மின்னேரியா

fi

இதுவரை கொழும்பில் மாத்திரம் 258 தீ விபத்துக்கள்

July 26, 2026

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தீயணைப்புத்

jud_1

அதிக விலைக்கு அரிசி விற்பனை; 5 இலட்சம் அபராதம்

July 26, 2026

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அரிசியை விற்பனை செய்த

sri-lanka-tourism

138,730 சுற்றுலாப் பயணிகள் வருகை

July 26, 2026

ஜூலை மாதத்தின் முதல் 21 நாட்களில் இலங்கைக்கு 138,730 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை

chamara

தைரியம் இருந்தால் உடனடியாக மாகாண சபை தேர்தலை நடத்துங்கள்!

July 26, 2026

அரசாங்கத்துக்கு தைரியம் இருந்தால் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்களின் உண்மையான செல்வாக்கை பரிசீலித்து பார்க்க வேண்டும் என

death

யானை தாக்கியதில் செட்டிகுள குடும்பஸ்தர் பலி!

July 26, 2026

வவுனியா, செட்டிகுளம் பிரதேசத்திற்குட்பட்ட ஆனைவிழுந்தான் கிராமத்தில் நேற்று (25) மாலை இடம்பெற்ற வனவாசி யானையின் தாக்குதலில் நபர் ஒருவர் சம்பவ

tea

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தனியார் பட்டதாரிகளை இணைக்க அரசாங்கம் முயற்சி?

July 26, 2026

கல்வித் துறையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்குத் தனியார் நிறுவனங்களின் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாக இலங்கை ஆசிரியர்

dds

யாத்திரிகர்களுக்கான இலவச இந்திய விசா முறைமை மீண்டும் அமுல்

July 26, 2026

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புனித பௌத்த யாத்திரை உட்பட ஆன்மீகக் குழுக்களாகப் பயணிக்கும் யாத்திரிகர்களுக்கான இலவச விசா வழங்கும் முறைமை மீண்டும்

45

ஹெபடைடிஸ் ஒழிப்பு சாதனையாளர்களின் பட்டியலில் இலங்கை பெண் வைத்தியர்

July 26, 2026

உலகளாவிய ஹெபடைடிஸ் ஒழிப்பு அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான ஹெபடைடிஸ் ஒழிப்பு சாதனையாளர்கள் பட்டியலில், இலங்கையின் தேசிய பால்வினை

3

த.வெ.க ஆட்சியில் பேச்சுரிமை பறிக்கப்பட்டுள்ளது: முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!

July 26, 2026

நெல்லை: தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டல் விடுத்தும் பேசியதாக கூறி கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் தி.மு.க

2

தர்மேந்திர பிரதான் பதவி விலகல்: அறவழிப் போராட்டத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றி – திருமாவளவன்!

July 26, 2026

சென்னை: இந்திய மத்திய அரசு நீட் தேர்வை முற்றாக கைவிட வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு நீட் விலக்கு சட்டத்தை இயற்றக்

hariny

இலங்கையில் கறுப்பு ஜூலை படுகொலைகளுக்குப் பொறுப்பானவர்கள் இன்று சிறைக்கைதிகளின் உரிமை பற்றிப் பேசுகின்றார்கள்

July 26, 2026

இலங்கையின் வரலாற்றில் ஜூலை மாதம் என்பது ஒரு கறுப்புப் புள்ளியாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது, வரலாற்றுக் காலம் முதல் இந்த ஜூலை மாதம்தான்