தமிழ்நாட்டில் விஜய் அரசாங்கத்துடன் உறவுகளை வைத்துக்கொள்வதால் இலங்கையின் அபிவிருத்திகளுக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் விஜய்யின் அரசாங்கத்துடன் உறவுகளை வைத்துக்கொள்வதால் இலங்கையின் எதிர்கால அபிவிருத்தியில் ஒரு பங்கை பெற்றுக்கொள்ள முடியுமாக இருக்கும் என்று நம்புகிறேன் என எதிர்க்கட்சி உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (7) இடம்பெற்ற அவசரகால சட்டத்தை நீடிக்கும் வர்த்தமானி மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ்நாட்டில் விஜய் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். இதற்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இதற்கு உறுதுணையாகவுள்ள செங்கோட்டையன் தொடர்பிலும் கூற வேண்டும். செங்கோட்டையன் 2018ஆம் ஆண்டில் இலங்கை வந்திருந்த போது யாழ்ப்பாணம், மட்டக்களப்பு நூலகங்களுக்கு புத்த்தகங்களை வழங்கியிருந்தார். கண்டியில் நடைபெற்ற எம்.ஜீ.ஆர் நூற்றாண்டு விழாவிலும் கலந்துகொண்டிருந்தார்.

விஜய்யின் ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கும் போது நாங்கள் தொடர்ந்தும் இவர்களுடன் உறவுகளை வைத்துக்கொண்டு, இலங்கையின் எதிர்கால அபிவிருத்தியில் ஒரு பங்கை பெற்றுக்கொள்வதற்கான வசதி இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது இதனால் விஜய்க்கும் செங்கோட்டையனுக்கும் எமது நன்றியை கூறிக்கொள்கின்றோம்.

இதேவேளை,பெருந்தோட்ட பகுதியில் தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் அறிவிக்கப்பட்ட எவ்வித உதவியும் போய் சேரவில்லை. ஜனாதிபதி 13ஆம் திகதி நுவரெலியாவுக்கு வந்து இது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதாக கூறியுள்ளார். தோட்டப் பகுதிகளில் காணிகளை பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கலால் அதனை கொடுக்க முடியாமல் இருப்பதாக கூறுகின்றனர். எவ்வாறாயினும் தோட்டப்பகுதி மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாக உள்ளது. இதன்படி காணி உரிமையை பெற்றுக்கொண்டால் இது தானாக வந்து சேரும்.

இதேவேளை அவசரகால சட்டம் நடைமுறையில் இருக்கும் நிலையிலேயே பல்வேறு இடங்களில் தோட்ட துரைமார்கள் தொழிலாளர்களை தாக்குகின்றனர். அண்மையில் நீலகாமத்தில் சம்பவமொன்று நடந்தது. தோட்டத்தில் குண்டர்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. அத்துடன் மொக்கா தோட்டத்திலும் தொழிலாளியொருவர் தாக்கப்பட்டுள்ளார். அதேபோன்று டெல்மார்க் தோட்டத்திலும் உதவி முகாமையாளர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.உங்களுக்கு அதிகமாக வாக்களித்த பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்கள் இருக்கின்றார்கள் என்பதனை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

Screenshot 2025-07-30 100024

நாடெங்கும் நலமும் வீடெங்கும் வளமும் பெருகட்டும்: எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

September 13, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தித் திருநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்குத் தனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

images - 2026-09-13T134857.284

“கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக கூட்டணிக்கு வருவார்கள்!” – அமைச்சர் ஷாஜகான் நம்பிக்கை

September 13, 2026

நாகர்கோவில்: கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வருவதாகவும், அவர்கள் வரக்கூடிய நாள்களில் அதிகாரப்பூர்வமாகத்

Tamil_News_lrg_432121120260912210533

லண்டன் கார் பந்தயம்: விபத்தைத் தாண்டி 3-வது இடத்தைப் பிடித்து நடிகர் அஜித் சாதனை!

September 13, 2026

லண்டன்: லண்டனில் முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்த புகழ்பெற்ற ‘லீ மான்ஸ் கப்’ (Le Mans Cup) கார்

images - 2026-09-13T133956.877

“வார்த்தைகளை அளந்து பேசுவது அரசியல்வாதிகளின் கடமை!” – அவதூறு பேச்சுகளுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி கண்டனம்

September 13, 2026

சென்னை: அரசியல் விமர்சனம் என்ற பெயரில் ஆபாசமாகப் பேசுவதும் மிரட்டல் விடுப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் ஜெகதீஸ்வரி தனது

36a6a19c6587d011b2834d714207e935

“லீடர்னா என்னன்னே தெரியாம பேசுறது ஏமாத்து வேலை!” – பிக்பாஸ் மேடையில் விஜய் சேதுபதி பேச்சு; முதலமைச்சருடன் ஒப்பிட்டுப் பரவும் சர்ச்சை!

September 13, 2026

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு (Leadership) குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி

26-6aa59dd45056b

லண்டன் கார் பந்தயத்தில் திடீர் என்ட்ரி கொடுத்த த்ரிஷா!

September 13, 2026

லண்டன்: இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று தொடங்கி

ba4598f0-5b62-11ee-8789-13750be9e58d.jpg

“நாவைக் காக்க வேண்டும்”: திமுகவினரின் அநாகரிகப் பேச்சுக்குத் திருக்குறள் வழியே கனிமொழி கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்திய நிலையில், அவர்களுக்கு அறிவுரை

1200-675-27101861-thumbnail-16x9-sdew

“ஆ.ராசா மற்றும் சேகர்பாபுவின் பேச்சுகள் திமுகவின் வன்மத்தைக் காட்டுகிறது” – அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யைக் கண்டித்து திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டங்களில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா மற்றும் முன்னாள் அமைச்சர்

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை; ஆவணங்கள் இல்லை” – அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்புப் பேட்டி!

September 13, 2026

துரை: அவசரநிலையின் போது மிசா சட்டத்தின் (MISA) கீழ் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்றும், வேறு காரணங்களுக்காகவே அவர்

b36f3954a794f9382daecd17359724952bb8ee0389728dfd9ea790750de3a7a2

“இல்லம் தேடி மதுவைக் கொண்டு வந்தவர் ஸ்டாலின்!” – ராமநாதபுரம் திமுக ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி பேச்சால் சலசலப்பு

September 13, 2026

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மகளிர் அணி நிர்வாகி ஒருவர் நாக்கு

eft9J2c8vpDNB_Wg

தாராபுரம் இடைத்தேர்தல்: எனக்காக முதலமைச்சர் விஜய் பிரசாரம் செய்வார் – தவெக வேட்பாளர் சத்தியபாமா தகவல்!

September 13, 2026

தாராபுரம் / சென்னை: நடைபெறவுள்ள தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்டது என்றும்,

768-512-25775621-thumbnail-16x9-madurai-malli

விநாயகர் சதுர்த்தி எதிரொலி: திண்டுக்கல் மார்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 1,500-க்கு விற்பனை!

September 13, 2026

திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் முகூர்த்த நாள்களை முன்னிட்டுத் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைப் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை