கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் “சர்வதேச மகளிர் தினம்” 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை, மாலை நிகழ்வாக சங்கரப்பிள்ளை மண்டபத்தில் பேரவை உறுப்பினர் எழுத்தாளர் வசந்தி தயாபரன் தலைமையில் பத்மா சோம காந்தன் அரங்காக நடைபெற்றது.
மனோன்மனி சண்முகதாஸ் தம்பதியினரின் மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து செல்விகள் பார்கவி கஜமுகன், சமேஷா ரஜீவ் தமிழ் வாழ்த்து இசைத்திருந்தார். சமூக செயற்பாட்டாளர் பூங்கோதை தங்கமயில், கவிஞர் லுணுகலை ஸ்ரீ, மற்றும் “பாத்துமுத்து ஹலால்தீன்” பற்றி எழுத்தாளர் ரக்ஷானா ஷரிபுத்தீன் அத்துடன் ஈழமும் பெண் ஆளுமைகளும் என்ற ஆய்வரங்கில் இவாஞ்சலின் முத்தம்மா தில்லையம்பலம் பற்றி ” மொழிபெயர்ப்பாளர் அம்பிகை திவகலாலா போமன் உரையாற்றினார்.