தமிழக சட்டமன்றத் தேர்தல்; உங்கள் வாக்குக்கு நான் வரிசெலுத்த முடியாது – வினோதினி

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் இலவசங்களை வாரி வழங்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகை வினோதினி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு கவனம் பெற்றிருக்கிறது.

நடிகை வினோதினி வைத்தியநாதன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அரசியல் கட்சிகளின் இலவசங்கள் குறித்து வெளியிட்டுள்ள பதிவு பேசுபொருளாக மாறியிருக்கிறது. அதில், 1,000 ரூபாய், 2,000 ரூபாய், 2,500 ரூபாய், தங்க மோதிரம் என்று நீங்கள் எதை வேண்டுமானாலும் கொடுங்கள். ஆனால் இதற்காக என்னால் வரி செலுத்த முடியாது என்று தடாலடியாக குறிப்பிட்டிருக்கிறார். தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் தகுதி வாய்ந்த மகளிருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கி வருகிறது.

அதிமுக தரப்பில் அளிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதியில் குல விளக்கு திட்டம் என்ற பெயரில் 2,000 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவெகவின் தேர்தல் வாக்குறுதியில் மதிப்புமிகு மகளிர் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 2,500 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளன. அதுமட்டுமின்றி தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு தங்க மோதிரம் வழங்கப்படும் என்று தவெக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதைத் தான் வினோதினி சுட்டிக் காட்டியிருக்கிறார்.

தமிழகம் போன்ற வளர்ச்சியை நோக்கி நகரும் மாநிலங்களில் கடன் சுமை என்பது பெரிதாக உள்ளது. இதனால் தனி நபர் மீதான சுமையை அதிகரிக்க வேண்டிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, விலைவாசி உயர்வில் கொண்டு போய் நிறுத்தும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். இப்படியான சூழலில் மேலும் இலவச அறிவிப்புகளை வெளியிடுவது கடன் சுமையை தாங்க முடியாத அளவிற்கு ஏற்றிவிடும் என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. எனவே இந்த நெருக்கடியை சமாளிக்கும் வகையிலான தொலைநோக்கு திட்டங்கள் உடன் அரசியல் கட்சிகள், குறிப்பாக ஆளும் கட்சி காய் நகர்த்த வேண்டியுள்ளது.

us sh

இலங்கையின் இறைமையை மதிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு

March 8, 2026

ஈரானியக் கப்பல்கள் தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதில் இலங்கையின் இறைமையை வொஷிங்டன் மதிப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Dau

வடக்கு ஒன்டாரியோ சுரங்கத் திட்டம்; சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து கூடுதல் தரவு தேவை?

March 8, 2026

வடக்கு ஒன்டாரியோவில் உள்ள Ring of Fire சுரங்கத் திட்டம் கூட்டாட்சி அல்லது மாகாண அரசுகளால் அதிகாரப்பூர்வமாக விரைவுபடுத்தப்படவில்லை. இருப்பினும்,

ott

விமர்சனத்துக்குள்ளாகியுள்ள ஒட்டாவாவின் “நிலைத்தொழில்கள் செயல் திட்டம்”

March 8, 2026

கனடாவில் எனர்ஜி துறையில் உள்ள வேலைகளை பாதுகாக்கும் நோக்கில் பிரதமர் மார்க் கார்னி அரசு வெளியிட்ட திட்டம், வேலை இழக்கும்

iris

IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு குணமடைந்த 22 மாலுமிகள் விமானப்படை முகாமிற்கு மாற்றம்!

March 8, 2026

தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை

viam

மன்னாரில் பெண்களுக்கு இடையூறு விளைவித்த இ.போ.ச. காப்பாளருக்கு தண்டனை

March 8, 2026

மன்னாரில் பெண்களுக்குப் பொதுப் போக்குவரத்தின் போது இடையூறு விளைவித்த இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) காப்பாளருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், பயணிகள்

arrest

செங்கலடி பிரதான வீதி வர்த்தக நிலைய திருட்டு; ஒருவர் கைது

March 8, 2026

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பிரதான வீதி – பதுளை வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் அண்மையில் இடம்பெற்ற

mu

நொச்சிமுனையில் முகத்தில் யானை மிதித்ததில் குடும்பஸ்தர் பலி

March 8, 2026

மட்டக்களப்பு நொச்சிமுனையைச் சேர்ந்த 59 வயதுடைய சோமசுந்தரம் அரிச்சந்திரன் என்பவர், சின்னப்புல்லுமலை கிராமத்தில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து வந்த

thiga

தோட்டத் தொழிலாளர்களது சம்பள உயர்வு தற்காலிக நிவாரணமே

March 8, 2026

தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பள உயர்வு என்பது ஒரு தற்காலிக நிவாரணம் மட்டுமே எனவும், அவர்களைச் சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதே

ne

நியூகாசிலை வீழ்த்தி காலிறுதியில் சிற்றி

March 8, 2026

இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு மன்செஸ்டர் சிற்றி தகுதி பெற்றுள்ளது. விலகல் முறையிலான இத்தொடரில்,

van

செங்கலடியில் வண்டுகளுடன் உணவு: உணவகத்திற்கு சீல்

March 8, 2026

மட்டக்களப்பு, செங்கலடி பகுதியில் மனிதப் பாவனைக்கு உதவாத மற்றும் வண்டுகள் நிறைந்த உணவுப் பொருட்களைக் கொண்டு உணவு தயாரிப்பில் ஈடுபட்ட

va

வளைகுடா எடுத்துள்ள அதிரடி திட்டம்

March 8, 2026

மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருவதையடுத்து, வளைகுடா நாடுகளின் எரிசக்தி உட்கட்டமைப்பு, சுற்றுலாத் துறை மற்றும் பாதுகாப்பு வரவு

lax

தேர்தலுக்காகவே நடிகர் விஜய்யின் தனிப்பட்ட விஷயங்கள் பெரிதாக்கப்படுகிறன!

March 8, 2026

தவெக தலைவர் விஜய்யின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து நான் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.