தனது இயலாமையை மறைக்கவே அரசாங்கம் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய முயல்கின்றது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தொடர்புபடுத்தி அவரை கைது செய்வதற்கான நாடகமொன்றை அரசாங்கம் அரங்கேற்றுகிறது. அரசாங்கம் தமது இயலாமையை மறைக்கவும், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைச் சரியாகக் கையாள முடியாமலும், ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்கவும் மேற்கொள்ளும் திட்டமிட்ட நாடகங்களாகும் என கோட்டாபயவின் முன்னாள் செயலாளர் சுகீஸ்வர பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத்தடை மற்றும் தற்போதைய அரசியல் சூழலில் அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டமிட்ட செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக, ஒருங்கிணைந்த கூட்டு எதிர்கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்கள் ஒன்றிணைந்து நுகேகொட நாளந்தாராம விகாரை வளாகத்தில் நேற்று புதன்கிழமை (03) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர்.

இந்த முக்கிய கலந்துரையாடலில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ஒருங்கிணைந்த கூட்டு எதிர்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பெருமளவிலான மகா சங்கத்தினர் கலந்துகொண்டு தமது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுகீஸ்வர பண்டார கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

புத்த சாசனம் என்பது பிக்குகள், பிக்குணிகள் மற்றும் உபாசகர்களை உள்ளடக்கிய ஒரு உன்னதமான அமைப்பாகும். மகா சங்கத்தினருக்கு ஏதேனும் அநீதி அல்லது நெருக்கடி ஏற்படும் பட்சத்தில், பௌத்த உபாசகர்கள் என்ற ரீதியில் நாம் அதில் தலையிட வேண்டியது எமது தார்மீகக் கடமையாகும்.

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரும் சட்டங்கள் மூலம் எமது சங்கத்தினரின் குரலை நசுக்கவும், சாசனத்தின் சொத்துக்களைக் கையகப்படுத்தவும், தலதா மாளிகை மற்றும் அட்டமஸ்தானம் போன்ற புனித இடங்களை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவும் முயற்சிப்பது பாரிய ஆபத்தாகும். எனவேதான், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் பொதுப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினோம். தற்போதைய ஆட்சியாளர்கள் தார்மீக நெறிகளைப் பின்பற்றுவதில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தொடர்புபடுத்தி அவரை கைது செய்வதற்கான நாடகமொன்றை அரசாங்கம் அரங்கேற்றுகிறது. இதற்காகப் பயன்படுத்தப்படும் அசாத் மௌலானா, பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்ற ஒருவராவார்.

இவ்வாறான ஒருவரிடம் வாக்குமூலம் பெறுவது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பாரிய தவறு. இவரைத் தேடிச் சென்று வாக்குமூலம் பெற்றமை நீதித்துறைக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாகும். இவரைக் கைது செய்து நாட்டுக்குக் கொண்டு வந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

அசாத் மௌலானா வழங்கியதாகக் கூறப்படும் எவ்வித ஆதாரங்களிலும் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. மேலும், முன்னைய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவும் அசாத் மௌலானாவின் கருத்துக்களில் அறிவியல் பூர்வமான உண்மைத்தன்மை இல்லை என்று தெளிவாகத் தெரிவித்துள்ளன. அரசாங்கம் தமது இயலாமையை மறைக்கவும், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைச் சரியாகக் கையாள முடியாமலும், ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்கவும் மேற்கொள்ளும் திட்டமிட்ட நாடகங்களாகும்.

சுரேஷ் சலே தற்போது போதிய அடிப்படை சுகாதார வசதிகள் அல்லது அமைதியான சூழல் வழங்கப்படவில்லை. அவர் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார். அவரது உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், அதற்குத் தற்போதைய அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

pta

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) நீக்கப்படுகிறது; இரண்டு மாதங்களில் புதிய சட்டம் அமலுக்கு வருகிறது

June 14, 2026

கொழும்பு: இலங்கையில் நீண்டகாலமாகப் பலத்த விவாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) முழுமையாக நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக

QLLE5GRSC5F5FCSDC7A63GB54U

பிரிட்டிஷ் கொலம்பியா இளைஞரைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்: தொடர் அச்சுறுத்தல் குற்றச்சாட்டு

June 14, 2026

ரொறன்ரோ: நபர் ஒருவருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் மற்றும் தொல்லை கொடுத்து வந்த குற்றச்சாட்டின் பேரில், பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தைச்

VFSVNY33WNCS5IL6IWULQ3EVUQ

ரொறன்ரோவில் கத்திக்குத்துச் சம்பவம்: 50 வயது மதிக்கத்தக்க நபர் படுகாயம்

June 14, 2026

ரொறன்ரோ: கனடாவின் ரொறன்ரோ நகரின் கிழக்குப்பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 13, 2026) இரவு நிகழ்ந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் 50 வயது

JZTK3F6L2NCDDLTE6OY6XIQ4OI

கனடாவில் கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சிறுவர்கள் பலி

June 14, 2026

ஒண்டாரியோ: கனடாவின் ஒண்டாரியோ (Ontario) மாகாணத்தில் நிகழ்ந்த மிக மோசமான வாகன விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து சிறுவர்கள்

sss

சியான்’ விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

June 14, 2026

தமிழ் திரையலகின் பெருமிதமாக ஜொலிக்கும் சர்வதேச தரத்திலான நட்சத்திர நடிகர் சியான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின்

ang

நவீன தொழில் நுட்பத்தில் தயாரான பாடலை வெளியிட்ட ‘அங்கீகாரம்’ படக் குழு

June 14, 2026

அறிமுக நாயகன் கே ஜே ஆர் நடிப்பில் தயாராகி உள்ள ‘அங்கீகாரம்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வெற்றி விழா ஆந்தம்’எனும்

sam

நடிகை சமந்தா நடிக்கும் ‘எங்கள் தங்கம்’

June 14, 2026

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையாக திகழும் சமந்தா கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

100

இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படம்

June 14, 2026

மூன்று தசாப்தங்களாக தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் கவனிக்கத்தக்க படைப்புகளை வழங்கி ரசிகர்களை தொடர்ந்து உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தும் இயக்குநர் சசி

sea

கடல் பகுதிகளுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை!

June 14, 2026

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான கடல் பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, காங்கேசன்துறையிலிருந்து மன்னார்

Legends_1

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 14, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

Shakthivel

இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களின் கொடூர உண்மைகளை செம்மணி புதைகுழி வெளிச்சமிட்டுக் காட்டுகிறது – அருட்தந்தை மா. சத்திவேல்

June 14, 2026

செம்மணி சமூக புதைகுழி அகழ்வுப் பணிகளில் வெளிவரும் மனித எச்சங்களும், குழந்தைகளின் பாவனை பொருட்களும் இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு மற்றும்

appu

குற்றவாளிகள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி

June 14, 2026

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் எவராக இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் தகுந்த தண்டனை வழங்கப்படும் வரை ஐக்கிய