உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (08.03.2026) கணிசமான உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில், ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5172 டொலராக பதிவாகியுள்ளது.
அத்துடன், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை இன்றையதினம் 84.54 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் காரணமாக தங்கத்தின் விலையில் தளம்பல் நிலை பதிவாகி வருகிறது.
இதேவேளை உள்நாட்டு சந்தையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட போதிலும், சர்வதேச சந்தையின் இந்த மாற்றத்தால் இலங்கையிலும் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.