செம்மணி சித்துபாத்தி புதைகுழிக்குள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட மழை அங்கியுடனான சிறுவரின் என்புக்கூடு தொடர்பில் தகவல் தெரிந்தால் #நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
அந்த அங்கியில் காலம் , அந்த என்புக்கூட்டினை சுற்றி காணப்பட்டது சவ பெட்டியாக இருக்க கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
கால் பகுதியில் சவ பெட்டிகளில் காணப்படும் பூ வடிவிலான இரும்பு தகட்டு துண்டு , கால் என்பு கூட்டில் காணப்படும் காலுறை என்பவற்றின் அடிப்படையில் நல்லடக்கம் செய்யப்பட்ட பூதவுடலாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
அவ்வாறு நல்லடக்கம் செய்யப்பட்டு இருப்பின் அது தொடர்பான தகவல்கள் அறிந்தவர்கள் நீதிமன்றிற்கு அறிய தருமாறு கோரப்பட்டுள்ளது.
நல்லடக்கம் செய்யப்பட்ட பூதவுடல் எனில் , அதனை உரியவர்கள் நீதிமன்றில் அடையாளம் காட்டி , மீள பெற்று மீண்டும் மத நம்பிக்கை அடிப்படையில் அதனை மீள அடக்கம் செய்யலாம்.
அந்த ஆத்மாவிற்கு செய்ய வேண்டிய கடமைகளை உரியவர்கள் செய்து கொள்ள முடியும்