டொரோண்டோ அமெரிக்கத் தூதரகத்தில் துப்பாக்கிச்சூடு; கனடாவின் பாதுகாப்பு மதிப்பாய்வு செய்ய வேண்டும் – பிரதமர் மார்க் கார்னி

டொரோண்டோ நகர மையத்தில் உள்ள அமெரிக்கத் தூதரக கட்டிடத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற மேற்படி சம்பவத்தை டொரோண்டோ காவல்துறையினர் “தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்” என்று குறிப்பிட்டுள்ளதோடு துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை தேடியும் வருகின்றனர் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் ரோயல் கனடியன் மவுண்டட் காவல்துறை(RCMP) மற்றும் டொரோண்டோ காவல்துறை அதிகாரிகள், Queen Street West மற்றும் University Avenue அருகில் உள்ள தூதரகக் கட்டிடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் காலை சுமார் 5:30 மணியளவில் சம்பவ இடத்துக்குச் சென்றதாக தெரிவித்தனர். ஆனால் டொரோண்டோ காவல்துறை துணைத் தலைவர் ஃபிராங்க் பொரெடோ (Frank Barredo) உண்மையான துப்பாக்கிச் சூடு காலை 4:29 மணிக்கு நடந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்கு பிறகு சம்பவ இடத்துக்கு வந்தபோது, துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் முன்பகுதி கதவு மற்றும் கட்டிடத்தில் ஏற்பட்ட சேதம் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார். கட்டிடத்துக்குள் மக்கள் இருந்திருக்கலாம் என நம்பப்பட்டாலும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றங்களுடன் — குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக நடத்தும் போருடன் — இந்தச் சம்பவத்திற்கு தொடர்பு உள்ளதா என கேட்கப்பட்டபோது, பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய சம்பவமாக இது உள்ளதா என்பதை விசாரணை மூலமே கண்டறிய முடியும் என்று டொரோண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.

கனேடிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) சமூக ஊடகத்தில் “ இது கொடூரமான வன்முறைச் செயலும் அச்சுறுத்தும் முயற்சியும்” என்று பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், கனடாவின் பாதுகாப்பு சூழலில் ஏற்படும் மாற்றங்களை மதிப்பாய்வு செய்யவும், உள்நாட்டு பாதுகாப்பை மேம்படுத்தும் வழிகளைப் பற்றி விவாதிக்கவும் தாம் தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருக்கின்றார்.

WhatsApp Image 2026-03-11 at 10.43.39

பிராம்டனில் வாகனங்களை திருடிய இளைஞர் கைது

March 11, 2026

பீல் பிராந்தியத்தின் மத்திய கொள்ளைத் தடுப்பு பிரிவு (Central Robbery Bureau) விசாரணையாளர்கள், பிராம்டனில் இடம்பெற்ற இரண்டு தனித்தனி ரைடு-ஷேர்

lo

அரசாங்கம் மக்களின் சுமையை மேலும் அதிகரித்திருக்கிறது – யுக்திய கூட்டமைப்பு

March 11, 2026

அரசாங்கம் நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியதன் மூலம், ஏற்கனவே மக்கள் முகங்கொடுத்திருக்கும் தாங்கமுடியாத சுமையை

man

தோட்டத் தொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய், கோதுமை மாவை மானிய விலையில் வழங்குக

March 11, 2026

மத்திய கிழக்கு போர்ச் சூழல் தீவிரமடைவதற்கு முன்னரே இலங்கையில் மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு குறித்து எச்சரிக்கப்பட்டிருந்த

tra_An

இ.போ.சபைக்கு புதிய கலாசாரத்தைக் கொண்டு வர பாடுபடுவோம்

March 11, 2026

மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, வினைத்திறனான,தொடர்ச்சியான மற்றும் ஒரு பலமான பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை நிறுவுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், அதற்காக

wash

140 அமெரிக்க வீரர்கள் காயம் – பென்டகன்

March 11, 2026

ஈரான் மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் ஆரம்பத்திலிருந்து இதுவரை சுமார் 140 அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் எட்டு பேர்

fin

பொருளாதார கண்காணிப்புக் குழு ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது

March 11, 2026

வெளிவாரியான அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணவும், குடிமக்களின் நலனைப் பாதுகாக்கவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் முன்மொழிவுக்கமைய

ns

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

March 11, 2026

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட) சட்டத்தின் பிரகாரம், 2026 மார்ச் 09 ஆம்

no

ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

March 11, 2026

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்

rs

மீள்குடியமர்த்தலுக்கான கொடுப்பனவு தொகை அதிகரிப்பு

March 11, 2026

மண்சரிவு மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக குடும்பங்களை மீளக்குடியமர்த்தல் தொடர்பான வேலைத்திட்டத்தின் கீழ் வீடொன்றை நிர்மாணிப்பதற்கான கொடுப்பனவுத் தொகையை திருத்தம்

ci

மொரட்டுவ முன்னாள் மேயரை விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கோரிக்கை

March 11, 2026

‘மக நெகும’ நகர்ப்புற மற்றும் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மொரட்டுவ மாநகர சபையின் 112 அபிவிருத்தி திட்ட

gl

தவறான நிர்வாகத்தினால் ஏற்பட்டுள்ள சிக்கல்களை மத்திய கிழக்கு மோதல்களுடன் சுமத்த வேண்டாம் – ஜி.எல்.பீரிஸ்

March 11, 2026

தவறான நிர்வாகத்தினால் ஏற்பட்டுள்ள சிக்கல்களை அரசாங்கம் மத்திய கிழக்கில் தற்போது தோற்றம் பெற்றுள்ள மோதல் மீது சுமத்தி விட்டு பொறுப்பில்

cabinet

வெளிநாட்டவர்களுக்கு கட்டண அறவீடின்றி வீசா கால நீடிப்பு!

March 11, 2026

மத்தியகிழக்கு ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டமையால் பாதிப்புக்குள்ளாகியுள்ள வெளிநாட்டவர்களுக்கு கட்டண அறவீடின்றி வீசாவுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிக்கும்