அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எப்போதும் அமைதியை விரும்புகிறார் என வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஈரான் தனது இராணுவத் தோல்வியை ஏற்றுக்கொள்ளத் தவறி தொடர்ந்து மோதலை முன்னெடுத்தால், அதற்கு முன்பைவிட கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதி டிரம்ப் தனது நிலைப்பாடுகளில் ஒருபோதும் பின்னடைவதில்லை என்றும், அவர் கூறுவது வெறும் மிரட்டல் அல்ல என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.