டிரம்பின் கருத்துக்களுக்குப் பதிலளிக்குமாறு கேட்கப்பட்ட போது, ஒட்டுமொத்தக் குடியேற்றமானது “கனடாவின் செழிப்பை” உயர்த்தியுள்ள போதிலும், கூட்டாட்சி அரசாங்கம் 2024 ஆம் ஆண்டில் குடியேற்றப் சேர்க்கையைக் குறைத்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.
“நாங்கள் குடியேற்ற அளவுகளைச் சீராக்கி வருகிறோம்” என்று புதன்கிழமை தெரிவித்த அவர், மலிவு விலையிலான வீட்டுவசதி மற்றும் சுகாதாரச் சேவைகளுக்கான அணுகலை உறுதி செய்வதற்காகவே சேர்க்கை அளவுகளைக் குறைக்க ஒட்டாவா நடவடிக்கை எடுத்ததாகக் கூறினார்.
2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தற்காலிகக் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை ஐந்து சதவீதமாகக் குறைக்க கனடா திட்டமிட்டுள்ளது.
ஒட்டுமொத்த நிரந்தரக் குடியுரிமை சேர்க்கையானது 2026 முதல் 2028 வரை 380,000 ஆகச் சீராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, அத்துடன் “தேவையான திறன்கள் மற்றும் அனுபவத்துடன்” ஏற்கனவே கனடாவில் உள்ள புலம்பெயர்ந்தோருக்கு முன்னுரிமை அளித்து குடியுரிமை அந்தஸ்து வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.