நடிகை சோனியா அகர்வால் கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘டார்க் ஜெயன்ட்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இந்திய மாநிலங்களவை உறுப்பினரான கமல்ஹாசன் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் கே. எஸ். கிஷன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டார்க் ஜெயன்ட்’ திரைப்படத்தில் சோனியா அகர்வால் , அயலி மதன் , ஜோவிட்டா லிவிங்ஸ்டன், அமுதவாணன் , லிவிங்ஸ்டன், கே. பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சங்கீத் மணி கோபால் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விக்னேஷ் ராஜா இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பயோவன் கிரியேசனிசம் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லோகேஸ்வரன் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ஹாரர் திரில்லருக்குரிய படம் என்பது போஸ்டரிலேயே தெரிவதால் ரசிகர்களை கவர்ந்துள்ளது.