இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரங்களை பற்றி அவரது கருத்துக்களை தெரிவித்து இருந்தார். அவரது கருத்துக்கள் தற்போது அதிக கவனத்தை பெற்று வருகின்றன. அதே நேரம் தற்போது ஜெயிலர்- 2 திரைப்படம், 700 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்து வருகிறது. இந்நிலையில் சுந்தர்.சி கூடிய கருத்துக்கள் ஜெயிலர்- 2 திரைப்படத்தின் வசூலை முன்வைத்து கூறப்பட்டுள்ளதா? என்று சந்தேகங்களும் எழுந்துள்ளன.
தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவான ‘மூக்குத்தி அம்மன் – 2 ‘திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6-ஆம் தேதி வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்த திரைப்படத்தின் முதல் பாகம் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளிவந்து நல்ல வெற்றியை பெற்றது. அதே நேரம் இரண்டாம் பாகம் சுந்தர்.சி இயக்குவதால் , படத்தில் நகைச்சுவை காட்சிகள் ஏராளமாக இருக்கும் ரசிகர்களை மேலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த படத்தின் பிரமோஷன் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
மூக்குத்தி அம்மன் – 2 திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் சுந்தர்.சி ஒரு நேர்காணல் கொடுத்திருந்தார். “நான் ஒரு லிட்டர் பாத்திரத்தில் 10 லிட்டர் பாலை ஊற்றி விட்டேன் என்று கூறினால் , அது எவ்வாறு சாத்தியப்படும்? அது போல தான் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் வசூல் வரம்பு ஒன்று உள்ளது. ஒரு திரைப்படம் 500 கோடி ரூபாய் வசூல் செய்தது, 1000 கோடி ரூபாய் வசூல் செய்து விட்டது, என்று சொல்வதெல்லாம் கட்டுக்கதை மற்றும் பொய்யாகும்.
தியேட்டருகே வராமல் பிளாப்பான திரைப்படங்களை கூட, வசூலில் சாதனை படைத்ததாக போலி செய்திகளையும் போஸ்டர்களையும் தயாரிப்பாளர்கள் பரப்பி மக்களை நம்ப வைக்கிறார்கள்,” என்று சுந்தர்சி கூறியுள்ளார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ள ஜெயிலர் -2 திரைப்படம் ₹500 கோடி வசூலை தாண்டி ₹700 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. சுந்தர் சி யின் கருத்துக்கள் ஒருவேளை ரஜினியின் திரைப்படத்தை மனதில் வைத்து கூறப்பட்டிருக்குமா? என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் தொடங்கியுள்ளன.
ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை சுந்தர்.சி இயக்குவதாக கடந்த வருடம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தத் திட்டத்திலிருந்து சுந்தர்.சி வெளியேறியிருந்தார். ஒருவேளை அதன் காரணமாக சுந்தர்.சி தற்போது இதுபோன்று கருத்துக்களை கூறி இருக்கிறாரா? என்று சிலர் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.