செம்மணி மனித புதைகுழி அகழ்வில் 3ஆம் கட்டத்தின் 37ஆம் நாளான இன்று, 429ஆம் இலக்க மனித எலும்புக்கூடு கால்கள் மடக்கப்பட்டு அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்தது அடையாளம் காணப்பட்டது.
கடந்த ஆண்டு நடைபெற்ற 2ஆம் கட்ட அகழாய்விலும் இதேபோன்று கால்கள் மடக்கப்பட்ட அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்த ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
ஒரே புதைகுழியில் இதுபோன்ற புதைப்பு இரண்டாவது முறையாக பதிவாகியுள்ளது.