விஜய் மாதிரி வேறு எந்த முதல் அமைச்சரும் இதுவரை கூறியது இல்லை: காதர் மொய்தீன்

சென்னை: ராயப்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சி குறித்துப் பேசுகையில் பல முக்கிய கருத்துகளை முன்வைத்தார். அவர் பேசுகையில், “தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி அமைந்து இரண்டு மாதங்கள் கூட நிறைவடையவில்லை. ஆனால், இந்த இரண்டு மாதங்களில் மக்கள் பாராட்டும் வகையிலான பல்வேறு காரியங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “ஊழல் இல்லாத ஆட்சியைத் தருவேன் என்று […]
ஐடி வேலையில் சென்னைக்கு டஃப் கொடுக்கும் தஞ்சாவூர்; எஃகு கோட்டையாய் உயர்ந்து நிற்கும் ஐடி பார்க்!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி சாலையில், தொழிலதிபர் ஹம்சவர்தன் மோகனின் முயற்சியால் பிரம்மாண்டமான ‘HAMLY TOWERS’ ஐடி பார்க் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 69,000 சதுர அடி நிலப்பரப்பில், 6 அடுக்குகளைக் கொண்ட இந்த நவீனக் கட்டடம், முழுமையாக எஃகு கட்டுமானத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுமார் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனைத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த ஐடி பார்க், […]
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு அ.தி.மு.க. ஒன்றிணைய சாத்தியமில்லை – செங்கோட்டையன்

கோபிசெட்டிபாளையம்: ஈரோடு மாவட்டம் கோபியில் செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அ.தி.மு.க.வின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் குதிரை பேரம் தொடர்பான சர்ச்சைகள் குறித்துப் பேசுகையில் பல முக்கியத் தகவல்களைத் தெரிவித்தார். அவர் பேசுகையில், \”குதிரை பேரம் தொடர்பாக அ.தி.மு.க.வினர் தங்கள் நெஞ்சில் கை வைத்துச் சொல்ல வேண்டும். 41 எம்.எல்.ஏ.க்களை மட்டும் வைத்துக்கொண்டு முதலமைச்சர் ஆகலாம் என்று அவர்கள் திட்டமிட்டிருந்தது உண்மைதானே?\” என்று கேள்வி எழுப்பினார். இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் […]
மது விற்பனை மூலம் அரசின் வருமானத்தை பெருக்கும் எண்ணம் இல்லை – அமைச்சர் விக்னேஷ்

கோவை: கோவை வருகை தந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ், செய்தியாளர்களிடம் பேசுகையில், மது விற்பனை மூலம் அரசின் வருமானத்தைப் பெருக்குவது என்ற தவறான பரப்புரைகளைத் தவிர்த்து விடும்படி வேண்டுகோள் விடுத்தார். மது விற்பனை மூலம் வருமானத்தை உயர்த்துவது என்ற எண்ணம் அரசுக்கோ அல்லது முதலமைச்சருக்கோ கிடையாது என்று அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார். சமீபத்தில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், அரசு மதுக்கடைகளைத் தொடர்ந்து மூடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், வருமானத்தை விட […]
முட்டை விலைகளை அதிகரிக்க தீர்மானம்
வெள்ளை முட்டையொன்றை 41 ரூபாவாகவும், சிவப்பு முட்டையொன்றை 42 ரூபாவாகவும் நாளை (20) முதல் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று (19) குளியாப்பிட்டியவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார். முட்டை விலை அதிகரிப்புக்கு அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுமே நேரடிப் பொறுப்பாளிகள் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். சோளம் இறக்குமதி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு சோள உற்பத்தி முட்டைத் தொழிலுக்குத் தேவையான […]
அநுர அரசுக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தத் தைரியமில்லை!
“மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு இதுவரை எந்தவிதமான வினைத்திறனான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. தேர்தல் குறித்து ஆராயும் நாடாளுமன்றச் செயற்குழுவின் நடவடிக்கைகள் மீது எமக்கு நம்பிக்கையில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தல் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், அவர்கள் காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகின்றனர். “மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவோம் என்று அரசு […]
அரசு புதிய முயற்சி: பஸ் பயணச்சீட்டில் விளம்பரம் அச்சிட்டு வருவாய் உயர்த்தும் திட்டம்!

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் செலவினங்களைக் குறைக்கவும், வருவாயைப் பெருக்கவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் அடிப்படையில், புதிய திட்டம் ஒன்று அமல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, பேருந்து பயணச்சீட்டுகளின் பின்புறம் விளம்பரங்களை அச்சிடுவதன் மூலம், பயணச்சீட்டு அச்சிடுவதற்கான காகிதச் சுருள்களை (Paper Roll) இலவசமாகப் பெற்று, போக்குவரத்துக் கழகங்களின் சுமையைக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல்வர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி, முதற்கட்டமாக ஆறு மாதங்களுக்குத் தேவையான சுமார் 9 கோடி […]
செம்மணி இன்றைய அகழ்வின் போது 9 என்புத் தொகுதிகள் அடையாளம்!

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது 9 என்புத் தொகுதி புதிதாக அடையாளம் காணப்பட்டது. 6 என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டது. இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 446ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 434 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
வைகோ விமர்சனம் செய்தாலும் நாங்கள் அவரை நேசிப்போம்-அமைச்சர் வன்னி அரசு

கோவை: சென்னை விமான நிலையத்தில் இருந்து கோவை வருகை தந்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், தனது துறை சார்ந்த முக்கிய முன்னேற்றங்களைப் பகிர்ந்து கொண்டார். கோவை கெம்பனூர் பகுதியில் மீண்டும் அரசு பேருந்து சேவை தொடங்கப்பட்டிருப்பது குறித்துப் பேசிய அவர், அங்குள்ள மக்களை நேரில் சந்திக்கவுள்ளதாகத் தெரிவித்தார். தமிழக முதல்வர் விஜய்யின் வழிகாட்டுதலின்படி, மாநிலம் முழுவதும் உள்ள சமூக நீதித்துறை விடுதிகளில் மாணவர்களின் நலனுக்காக இன்வெர்ட்டர் வசதி மற்றும் தரமான […]
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீன சிகரெட்டுகளுடன் இந்தியர் இருவர் கைது

79 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனத் தயாரிப்பு சிகரெட் தொகையைச் சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற்ற முயற்சித்த வெளிநாட்டுப் பயணிகள் இருவர், ஞாயிற்றுக்கிழமை (19) அன்று அதிகாலை விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இந்தியாவின் ஹைதராபாத் மற்றும் மும்பை நகரங்களைச் சேர்ந்த 26 வயதுடையவர்கள் ஆவர். அங்குள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிபவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் இந்த […]