ஐடி வேலையில் சென்னைக்கு டஃப் கொடுக்கும் தஞ்சாவூர்; எஃகு கோட்டையாய் உயர்ந்து நிற்கும் ஐடி பார்க்!

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி சாலையில், தொழிலதிபர் ஹம்சவர்தன் மோகனின் முயற்சியால் பிரம்மாண்டமான ‘HAMLY TOWERS’ ஐடி பார்க் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 69,000 சதுர அடி நிலப்பரப்பில், 6 அடுக்குகளைக் கொண்ட இந்த நவீனக் கட்டடம், முழுமையாக எஃகு கட்டுமானத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுமார் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனைத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் ஆகியோர் திறந்து வைத்தனர்.

https://youtu.be/n1pRVf1zbWg

இந்த ஐடி பார்க், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 7,000 ஐடி மாணவர்களுக்கு உள்ளூரிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது. எஃகு கட்டுமான முறையைப் பயன்படுத்தியதன் மூலம், அடித்தளச் செலவு குறைக்கப்பட்டதோடு, கட்டுமானப் பணிகள் வேகமாகவும் முடிக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் இனி நெற்களஞ்சியம் மட்டுமின்றி ஐடி ஊழியர்களின் மையமாகவும் திகழும் என்று தொழிலதிபர் ஹம்சவர்தன் மோகன் நம்பிக்கை தெரிவித்தார். வெளிநாட்டு ஐடி நிறுவனங்கள் சென்னையைத் தொடர்ந்து தஞ்சாவூரிலும் தனது கிளையைத் தொடங்க வேண்டும் என்று அவர் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

#Thanjavur #HamlyTowers #ITPark #Employment #SteelConstruction #TamilNaduIT #DeltaDevelopment #TechJobs #EconomicGrowth #BreakingNews #BMNews #TamilNews #LatestUpdate #Infrastructure #YoungTalent #ITHub #StateDevelopment #Modernization #SuccessStory #TamilNaduGovernment

3

ஊழல் பட்டியல் எப்போது வெளியீடு? – அமைச்சர் மரிய வில்சன் அப்டேட்!

July 27, 2026

சென்னை: சென்னை பிராட்வேயில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

2

ரூ.1,34,166 மதிப்புள்ள செயற்கைக்கோள் தொலைபேசியை 74 மீனவர்களுக்கு வழங்கிய அமைச்சர் ஸ்ரீநாத்!

July 27, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 74 ஆழ்கடல் மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசிகள்

Ravikaran

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டேன் ; இனி எப்படிக் கேட்பது எனத் தெரியவில்லை – ரவிகரன் ஆதங்கம்!

July 27, 2026

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டோம்,

1

மேகதாதுவில் ஒரு செங்கலை கூட கர்நாடகா வைக்க முடியாது: அமைச்சர் செங்கோட்டையன்!

July 27, 2026

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அளுக்குளி பகுதியில் நடைபெற்ற ‘உங்களை தேடி நாங்கள்’ திட்ட முகாமை வருவாய்த்துறை மற்றும்

SHOOTING

தீவிரமடையும் பாதாள உலக வன்முறைகள்

July 27, 2026

இவ்வருடத்தில் இதுவரை இலங்கையில் 22 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இவற்றில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும்

45925fe0-d767-44cd-9b26-f62575fc384f.jpg

சீயட்ல் சென்டர் துப்பாக்கிச் சூடு: சிறுவன் உட்பட இருவர் பலி, குறைந்தது ஐவர் காயம்

July 27, 2026

ஞாயிற்றுக்கிழமை இரவு சீயட்ல் சென்டரில் (Seattle Center) முக்கிய உணவுத் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்

BGWK6B54S5E3PJ37A4S5J7SH7Y

‘இங்கே ஒரு குழப்பமான சூழல் நிலவியது’: வாட்டர்லூ பல்கலைக்கழகப் பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் விசாரணை; நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

July 27, 2026

வாட்டர்லூவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 31 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இது நடப்பாண்டில் அப்பகுதியில் பதிவான

XRIJV6PPMZA57CCRZJQHBIDLBY

ஸ்கார்பரோவில் சாஸ் தெளித்து கவனம் சிதறடித்துத் திருடிய சந்தேக நபர்களின் புதிய புகைப்படங்களை பொலிஸார் வெளியீடு

July 27, 2026

ரொறன்ரோ பொலிஸார், கவனம் சிதறடிக்கும் திருட்டுச் சம்பவத்தின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டவரின் மீது சந்தேக நபர் ஒருவர் ‘கெட்சப்’ (Ketch-up

XHFAYQV4L5FSHADV33MY3MBVHY

மின்சார ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம், சாட்சிகளைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்

July 27, 2026

11 வயது சிறுவன் ஒருவன் தனது மின்சார ஸ்கூட்டரின் (e-scooter) கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியதில்

LNUXYUAULNCK7GSPUXGXBRCQKM

இது கவலையளிக்கிறது’: வெறுப்புணர்வு சார்ந்த தாக்குதல்கள் எனச் சந்தேகிக்கப்படும் சம்பவங்களில் ரொறன்ரோவிலுள்ள யூதர்களுக்குச் சொந்தமான 2 பேக்கரி கிளைகள் இலக்கு வைப்பு

July 27, 2026

பெருமளவிலான ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த (GTA) பல யூத தொழுகைக்கூடங்கள் (synagogues) மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார்

death

குளியலறையில் உருக்குலைந்த நிலையில் சடலம்

July 27, 2026

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

kava

காவடி நடனத்தை நீக்க பரிந்துரை

July 27, 2026

தேவேந்திரமுனை ஸ்ரீ உத்பலவர்ண மகா தேவாலயத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருந்த பெரஹரவில் ஊர்வலத்தில் காவடி நடனத்தை நீக்குவதற்கு பொலிஸார்