யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது 6 என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டது. மேலும் சிறு குழந்தையின் என்புத் தொகுதி ஒன்றும், குழந்தைகளின் 3 என்புத் தொகுதிகளும் உட்பட 7 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 420 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 416 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.