கடுவலையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு!

கடுவலை – நவகமுவ வந்துராமுல்ல பகுதியில் துப்பாக்கிச்சூடொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு இன்று (16) இரவு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர் தற்போது நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வெலிக்கடை சிறைச்சாலை பற்றி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை

வெலிக்கடை சிறைச்சாலையைப் பரிசோதிப்பதற்காகச் சென்ற தங்களது அதிகாரிகளை சிறைச்சாலைக்குள் அனுமதிக்காமை குறித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது கடுமையான கவலையையும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை 7ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று வெலிக்கடை சிறைச்சாலையைப் பரிசோதிப்பதற்காகச் சென்றிருந்த போதிலும், அவர்களுக்கு சிறைச்சாலைக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை. முன்அறிவித்தல் இன்றி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தடுப்புக் காவலில் உள்ள இடங்களுக்குள் நுழைவதற்கு ஆணைக்குழுவிற்கு அதிகாரம் அளிக்கும் 1996ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க இலங்கை மனித […]
2026ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்

2026ஆம் ஆண்டுக்கான தேசிய பாடசாலை ஆசிரியர்களின் வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் இணையவழி ஊடாக கோரப்பட்டுள்ளன. இதற்கமைய, தேசிய பாடசாலை ஆசிரியர்கள் 2026 ஜூலை 16 முதல் ஜூலை 30 வரை http://nstt.moe.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக இணையவழியில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும். இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அச்சிடப்பட்ட பிரதியை (Printed copy) 2026 ஜூலை 31ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ தாங்கள் சம்பளம் பெறும் பாடசாலையின் அதிபரிடம் ஒப்படைப்பது கட்டாயமாகும் என கல்வி, […]
இலங்கையின் பாடசாலை மாணவர்களுக்கான சீருடையை அன்பளிப்பு செய்த சீனா

இலங்கையின் அரச பாடசாலைகள், அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்கள் மற்றும் பிக்குகளுக்கான 2027ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத் துணிகள் சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்படவுள்ளன. இதற்கான உத்தியோகபூர்வ சான்றிதழ்கள் பரிமாற்றம் நேற்று (15) பத்தரமுல்லை, இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது. இந்த விசேட உதவித் திட்டத்தின் கீழ், 2027ஆம் ஆண்டிற்காக இலங்கையில் உள்ள சுமார் 4.18 மில்லியன் பாடசாலை மாணவர்களின் முழுமையான சீருடைத் தேவை பூர்த்தி […]
பிரிட்டிஷ் கொலம்பியாவின் பெம்பர்டன் அருகே காட்டுத்தீ: அவசரகால வெளியேற்ற உத்தரவு மற்றும் எச்சரிக்கைகள்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாநிலத்திலுள்ள பெம்பர்டன் பகுதியில் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக, அங்குள்ள பூங்கா ஒன்றிலிருந்து மக்கள் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், நகரின் பல குடியிருப்புப் பகுதிகளுக்கு அவசரகால வெளியேற்ற எச்சரிக்கையும் (Evacuation alert) விடுக்கப்பட்டுள்ளது. மனிதர்களின் அலட்சியச் செயல் காரணமாக உருவான இந்த காட்டுத்தீ, கடந்த புதன்கிழமை பிற்பகல் 99 ஆவது நெடுஞ்சாலையிலிருந்து (Highway 99) 5 கிலோமீட்டர் தொலைவில் கண்டறியப்பட்டது. பி.சி. காட்டுத்தீ சேவை அமைப்பின் (B.C. Wildfire Service) தகவல்படி, […]
தென்மேற்கு பருவநிலை; பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை!

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் தென்மேற்கு பருவநிலை காரணமாக, பல பிரதேசங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான மற்றும் கற்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 50 […]
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், சிலரின் பொறுப்பற்ற மற்றும் நாகரிகமற்ற நடத்தையால் இடைநிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது என்பது வருத்தமளிக்கிறது-அமைச்சர்சந்திரசேகர்

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், சிலரின் பொறுப்பற்ற மற்றும் நாகரிகமற்ற நடத்தையால் இடைநிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது என்பது வருத்தமளிக்கிறது.என அமைச்சர்சந்திரசேகர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவும் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், சிலரின் பொறுப்பற்ற மற்றும் நாகரிகமற்ற நடத்தையால் இடைநிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது என்பது வருத்தமளிக்கிறது. மக்களின் வாழ்வாதாரம், உட்கட்டமைப்பு, விவசாயம், மீன்பிடி, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட […]
நீதித்துறையின் பிரதான கட்டமைப்பை கட்டுப்பாட்டுக்குள் வைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது – சாகர காரியவசம்

பிரதம நீதியரசர் உட்பட நீதியரசர்களுக்கும் சேவை காலத்தை நீட்டித்து அவர்களை மகிழ்வித்து நீதித்துறையின் பிரதான கட்டமைப்பை கட்டுப்பாட்டுக்குள் வைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. நீதித்துறையை கட்டுப்படுத்தவோ அல்லது ஆக்கிரமிக்கவோ நாங்கள் முயற்சிக்கவில்லை. நீதித்துறையின் சுயாதீனத்தை முன்னிலைப்படுத்திச் செயற்பட்டோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (16) நடைபெற்ற அமர்வின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான […]
செம்மணி; இன்று 6 என்புத் தொகுதிகள் அடையாளம்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது 6 என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டது. மேலும் சிறு குழந்தையின் என்புத் தொகுதி ஒன்றும், குழந்தைகளின் 3 என்புத் தொகுதிகளும் உட்பட 7 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 420 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 416 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
முழுமையாக சிபிஐ வசம் போன ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; முதல்வர் விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சியினர் நன்றி

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை, சிபிஐ (CBI) வசம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு அக்கட்சியினர் நன்றி தெரிவித்துள்ளனர். இது குறித்துப் பேசிய மாநிலத் தலைவர் ஆனந்தன், கடந்த கால அரசு இந்த விசாரணையை இழுத்தடித்ததாகவும், தற்போதைய த.வெ.க. அரசு மேல்முறையீட்டு மனுவைத் திரும்பப் பெற்று வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வழிவகை செய்துள்ளதாகவும் பாராட்டினார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல் தலையீடு இருப்பதாகக் குற்றம் சாட்டிய […]