யாழ்ப்பாணம்-சுன்னாகம் பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக தமிழ்ப் பொலிஸ் அதிகாரி சி.நிதர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே கடமை புரிந்த பொலிஸ் அதிகாரியான பிறடோ என்பவருக்கு நேற்று(20.2.2026) திடீர் இடமாற்றம் வழங்கப்பட்ட நிலையில், இவ்வாறு புதிய பொறுப்பதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டார்.
தமிழர் பகுதிகளில் தமிழ் தெரியாத சிங்கள மொழி பேசும் பொறுப்பதிகாரிகளை நியமிக்கின்றதால் மக்கள் தமது பிரச்சினைகளை தெளிவாக கூற முடியாத சூழ்நிலை காணப்படுகிறது.
இந்நிலையில் தமிழ் பொலிஸ் பொறுப்பதிகாரி நியமிக்கப்பட்டதன் மூலம் மக்களுக்கான சேவைகளை திறம்பட செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.