சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ். பல்கலைகழக மாணவர்கள் கருப்பு கொடி பறக்க விட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விசாரணையை இன்று(10.03.2026) குற்றப் புலனாய்வுப் பிரிவு (DCDB) முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவித்து தமிழர் தாயகத்தில் இந்த முறை போராட்டங்களும் பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் கறுப்புக்கொடி பறக்க விடப்பட்டிருந்தது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அண்மைய கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன், கறுப்புக்கொடி ஏற்றிய மாணவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த வருட சுதந்திர தினத்தன்றும் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் கறுப்புக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.