சிறைச்சாலை படுகொலைகளுக்கு அரசாங்கமே பொறுப்பு ; அரசியல் இலாபம் தேட நான் தயாரில்லை : நாமல் ராஜபக்ஷ

சிறைச்சாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள மோதல்களும் அதிகாரிகளின் படுகொலைகளும் அரசாங்கத்தின் புலனாய்வுப்பிரிவின் பலவீனம் மற்றும் நிர்வாகச் சீர்கேட்டையே காட்டுகிறது. இதற்கு அரசாங்கமே முழுமையாகப் பொறுப்புக்கூற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

எனினும், உயிரிழந்த அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பெற்றோர்களின் வேதனையைப் பயன்படுத்தி இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை அரசியல்மயமாக்கவோ அல்லது அரசியல் இலாபம் தேடவோ தான் தயாரில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒபேசேகரபுர பிரதேசத்தில்  வியாழக்கிழமை (09) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ என்ற விளம்பரத்திற்காக இளைஞர்களைக் காரணம் ஏதுமின்றி சிறைகளில் அடைத்து வருகிறது. சிறையிலுள்ளவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்பதால் அவர்களுக்குச் சிறைத்தண்டனைக்கு பதிலாக முறையான புனர்வாழ்வே அளிக்கப்பட வேண்டும். 11,000 பேர் மட்டுமே இருக்கக்கூடிய சிறைகளில் 45,000 பேரை அடைத்து வைத்துள்ளதோடு, 3,000 கைதிகளைக் கண்காணிப்பதற்கு வெறும் 180 அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ளதால் அங்கு பாதுகாப்புப் பலவீனமடைந்துள்ளது.

சிறைக்குள் இவ்வளவு பெரிய மோதல் வெடிக்கும் வரை அரசாங்கத்தின் உளவுத்துறை என்ன செய்தது? சம்பவத்தின் போது உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படாமைக்கான காரணம் என்ன? தங்களுக்கு எவ்வித உத்தரவும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் அமைச்சரின் முகத்திற்கு நேராகவே கூறுகின்றனர். அத்துடன், இந்தச் சம்பவம் நடந்து 24 முதல் 48 மணித்தியாலங்கள் வரை அரசாங்கம் ஏன் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாக இருந்தது என்ற நியாயமான சந்தேகம் தமக்கு எழுகிறது.

பின்தங்கிய சூழ்நிலையையும் சமூக நெருக்கடியையும் பயன்படுத்தியே இந்த அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியது. தற்போது தங்களது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் அதே போன்றதொரு சமூக அனர்த்தத்தையும் மக்கள் மீதான அழுத்தங்களையும் இவர்கள் மீண்டும் திட்டமிட்டு உருவாக்கி வருகிறார்களா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றார்.

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்