இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை அதிகரித்ததைத் தொடர்ந்து, சினோபெக் மற்றும் லங்கா ஐ.ஓ.சி ஆகிய நிறுவனங்களும் எரிபொருள் விலைகளை அதிரடியாக அதிகரித்துள்ளன.
சினோபெக் நிறுவனத்தின் புதிய விலை மாற்றங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 95 பெற்றோல்: ஒரு லீற்றரின் விலை 122 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. (புதிய விலை – 487 ரூபா)
சுப்பர் டீசல்: ஒரு லீற்றரின் விலை 219 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. (புதிய விலை – 572 ரூபா)
ஒக்டேன் 92 பெற்றோல்: ஒரு லீற்றரின் விலை 81 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. (புதிய விலை – 398 ரூபா)
ஒட்டோ டீசல்: ஒரு லீற்றரின் விலை 79 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. (புதிய விலை – 382 ரூபா)
நேற்று சனிக்கிழமை (21) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனது விலைகளை உயர்த்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் அதே விலையினைக் கடைப்பிடிப்பதாக அறிவித்துள்ளது.
ஒக்டேன் 92 பெற்றோல்: 81 ரூபாவினால் அதிகரிப்பு (புதிய விலை – 398 ரூபா)
ஒக்டேன் 95 பெற்றோல்: 90 ரூபாவினால் அதிகரிப்பு (புதிய விலை – 455 ரூபா)
லங்கா வெள்ளை டீசல்: 79 ரூபாவினால் அதிகரிப்பு (புதிய விலை – 382 ரூபா)
சுப்பர் டீசல்: 90 ரூபாவினால் அதிகரிப்பு (புதிய விலை – 443 ரூபா)
லங்கா மண்ணெண்ணெய்: 60 ரூபாவினால் அதிகரிப்பு (புதிய விலை – 255 ரூபா)
இந்த விலை அதிகரிப்பானது போக்குவரத்துத் துறை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.