சாந்திபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் மாதா சிலை?

மன்னார் சாந்திபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த மாதம் தனி நபர் ஒருவரால் எந்த ஒரு அனுமதியும் இன்றி மாதா சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சாந்திபுர விளையாட்டு கழகத்தினால் குறித்த மைதானத்தில் சிலை வைப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக எழுத்து மூலம், முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நகரசபை தலைவர் குறித்த விளையாட்டு மைதானத்துக்கு முன்பு தனிநபர் ஒருவருக்கு சொந்தமான காணியில் சிலை மாற்றி வைக்கப்பட்டதுடன், உரிய அனுமதி கிடைத்தால் மாத்திரம் சிலை வைக்க அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து கடந்த மாதம் இடம்பெற்ற மன்னார் நகரசபை அமர்வில் குறித்த சிலை வைத்த விடயம் தொடர்பாக பேசப்பட்ட நிலையில், இரு உறுப்பினர்கள் சிலை வைக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரியிருந்தனர்.

ஆனால் அங்குள்ள இளைஞர் கழகம் சிலை வைப்பதற்கு அனுமதிக்கவில்லை எனவும், காந்திபுரத்தில் உள்ள சில பொது அமைப்புகள் மாத்திரம் சிலை வைப்பதற்கு எதிர்ப்பு இல்லை என கடிதம் வாங்கியிருப்பதாகவும், எனவே இது ஒரு முரண்பாடான விடயம்.

எனவே உரிய அமைச்சு மற்றும் ஆளுநரிடம் அனுமதிக்கு அனுப்பி பின்னர் அனுமதி வழங்க வேண்டும் என தவிசாளர் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான பின்னனியில் நேற்றைய தினம் எந்த ஒரு அனுமதியும் இன்றி உரிய தரப்புக்கு அறிவிக்கப்படாமல் மீண்டும் குறித்த சிலை விளையாட்டு மைதானத்தில் வைக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் விளையாட்டு கழக பிரதிநிதிகள் மன்னார் நகரசபை தலைவரிடம் வினவியபோது, அதற்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டதாகவும்,சபையில் அனுமதி கிடைத்து விட்டதாகவும் தலைவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் நகரசபை செயலாளரிடம் இளைஞர் கழக உறுப்பினர்கள் வினவியபோது இவ்வாறான சிலைகள் வைப்பதற்கு சபை அனுமதி வழங்கவில்லை என்றும் அவ்வாறு வழங்குவதற்கு எந்த அதிகாரமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் விளையாட்டுக்காக மைதானத்தை பயன்படுத்து விளையாட்டுக்கழகம் மற்றும் உரிய அரச நிறுவனங்களிடம் எந்த ஒரு அனுமதியும் பெறாது குறித்த சிலை வைக்கப்பட்டுள்ளமை விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

குறித்த சிலை முன்னதாக மாற்றி வைக்கப்பட்ட தனியார் காணியில் இருந்த போது எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதே நேரம் குறித்த சிலை அமைந்துள்ள இடத்தில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் அதே மத சிலையும் 500 மீற்றர் தூரத்தில் அதே கோவிலும் இருக்கும் பட்சத்தில் இளைஞர்கள் விளையாடும் மைதானத்தில் ஏன் இந்த செயல்பாடு என இளைஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்

ron

தனி விமானத்தில் வெளியேறிய ரொனால்டோ

March 5, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. சவுதி

pucs

நிலக்கரியில் 848 கோடி ரூபாவை கரியாக்கிய அரசாங்கம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

March 5, 2026

நிலக்கரி இறக்குமதியில் நாட்டுக்கு சுமார் 848 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டமைப்பு மற்றும்

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்